பார்டர் கவாஸ்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டியானது தற்போது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில், முகமது சிராஜ் 14 விக்கெட்டுகளை எடுத்திருந்தார், ஆனாலும் அவருக்கு புதிய பந்தை கட்டுப்படுத்தும் திறன் மோசமாக இருப்பதால் பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார்.
இந்நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கரும் முகமது சிராஜே அணியில் இருந்து தூக்குங்கள் என தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நேரடியாக சொல்லுங்கள்:
சுனில் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறியதாவது, “நான் என்ன நினைக்கிறேன் என்றால் ஒரு வேளை முகமது சிராஜிற்கு கொஞ்சம் பிரேக் தேவை. நான் பிரேக் என்று சொல்லவில்லை, நீங்கள் அணியில் நன்றாக செயல்படாததால் அணியிலிருந்து உங்களை வெளியேற்றி விடுகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்திய அணியின் மேலாண்மையினர் சிராஜை அழைத்து ‘இங்கே பார் உன்னுடைய செயல்திறன் போதுமானதாக இல்லாததால், நீ அணியில் இருந்து நீக்கப்படுகிறாய்’ என்று நேரடியாகச் சொல்ல வேண்டும். “பிரேக்” என்ற சொல் பயன்படுத்தும் போது, அது வீரர்களுக்கு தவறான எண்ணங்களை ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் விளையாட்டை மேம்படுத்த தேவையில்லை என்று உணர்கிறார்கள். எனவே, அவரை நோக்கி உன்னுடைய செயல்திறன் நன்றாக இல்லை என நேரடியாக கூறுங்கள்”.
இந்த ஆடுகளத்துக்கு ஏற்றவர் நீ இல்லை:
மேலும் அவர், “நாங்கள் எதிர்பார்த்தபடி நீ பந்து வீசவில்லை, குறிப்பாக மற்ற பந்துவீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளத்தில் நீ உதவவில்லை” என்று தான் சொல்ல வேண்டும். நீங்கள் இரண்டு மாற்றங்களை செய்ய விரும்பினால், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ரானாவை ஜஸ்பிரித் பும்ராவுக்கு உதவ அழைக்கலாம். இதை செய்ய வேண்டுமானால், முகமது சிராஜியும் அணியில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்” என்று கூறினார்.

