சொன்ன உடனே புரிஞ்சுகிட்டாரு.. நான் இதை வேணும்னு பண்ணல.. அணியின் நலனுக்காகவே இந்த முடிவை எடுத்தேன் – ரோகித் சர்மா பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது வரிசையில் களம் இறங்கக் கூடிய வீரரான சுப்மான் கில் அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை ரோகித் சர்மா பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

- Advertisement -

இதில் இந்திய கிரிக்கெட் அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்யக்கூடிய இளம் வீரர் சுப்மான் கில்லை நீக்கம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்டிங்க்கு சாதகமாக இருந்த நிலையிலும் கில்லை நீக்கம் செய்து ஆச்சரியப்படுத்தியது. இதன் காரணமாக ரோகித் சர்மா மீது விமர்சனங்கள் அதிக அளவில் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தற்போது கேப்டன் பகுதியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக பும்ரா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார். மேலும் அடுத்த போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவது குறித்து பெரிய சந்தேகம் இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக கில் அடுத்த போட்டியில் களம் இறங்குவார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நான்காவது போட்டியில் கில் நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை ரோகித் சர்மாவே கூறியிருக்கிறார்.

இது குறித்து ரோஹித் சர்மா கூறும் பொழுது “நாங்கள் கில்லை நீக்கவில்லை என்பதை அவருடன் பேசும் போது தெளிவாக அவரே புரிந்து கொண்டார். ஏனென்றால் பந்துவீச்சில் நாங்கள் இன்னும் நல்ல வசதியாக இருக்க விரும்பினோம். பேட்டிங் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் எங்களுக்கு பந்து வீச்சிலும் தேவைப்பட்டது. இதன் காரணமாகத்தான் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் செயல்படக்கூடிய வாஷிங்டன் சுந்தர் பொருத்தமாக இருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க:யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. 5வது டெஸ்டில் ரோகித் சர்மா நீக்கம்? கம்பீர் சொன்ன தகவல்

இதை கில் சரியாக புரிந்து கொண்டதால் எங்களது பேச்சுவார்த்தை சமரசத்தில் முடிந்தது. அவர் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்ற காரணத்தினால் அவரை நீக்கவில்லை. எங்களது டீம் காம்பினேஷன் அது போன்ற வகையில் தேவைப்பட்டதால் அதற்காகவே அந்த முடிவை எடுத்தோம். இதனை நான் அணியின் நலனுக்காகவே அந்த முடிவை எடுத்தேன்”என்று ரோகித் சர்மா விளக்கமாக கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles