இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி நகரில் நடைபெறுகிறது. பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி சமன் செய்ய வேண்டும் என்றால் கடைசி டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.இல்லை என்றால் ஆஸ்திரேலிய அணி கடைசி டெஸ்டில் தொடரை வென்று விடும்.
அது மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தகுதி பெரும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இந்திய அணி கடைசி டெஸ்டில் வெல்ல வேண்டும். இந்த சூழலில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நடப்பு டெஸ்ட் போட்டியில் 5 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாகவே 31 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.
இதனால் ரோகித் சர்மா நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இதைப் போன்று ரிஷப் பண்ட் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் மோசமான ஷார்ட் ஆடி ஆட்டமிழந்தார். இதனால் போட்டியின் முடிவே மாறியது.இதற்கு கம்பீர் கடும் எதிர்ப்பை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் சிட்னியில் நடைபெற்ற பயிற்சி முகாமல் கில், விராட் கோலி,கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் தான் முதலில் பயிற்சியில் ஈடுபட்டார்கள். ரோகித் சர்மா, பண்ட், ஆகியோர் முதல் ஒரு மணி நேரத்திற்கு மைதானம் பக்கமே வரவில்லை.இதை அடுத்து ரோகித் சர்மா தனுஷ்கோட்டியான், அபிமன்யூ ஈஸ்வரன் போன்ற வீரர்கள் கடைசியாக வந்து சிறிது நேரம் பயிற்சி மேற்கொண்டனர்.
இதனால் ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறதுஇது குறித்து பயிற்சியாளர் கம்பீரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ரோகித் சர்மா நன்றாக தான் இருக்கிறார்.எனினும் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா இடம்பெறுவாரா இல்லையா என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது.
ஆடுகளத்தின் தன்மையைப் பார்த்து பிளேயிங் லெவனை முடிவு செய்வோம் என்று கம்பீர் கூறி இருந்தார். அது மட்டும் இல்லாமல் சூழலுக்கு ஏற்ப விளையாடாமல் இயல்பான ஆட்டத்தை விளையாடுகிறேன் என்று வீரர்கள் ஆட்டம் இழப்பது குறித்தும் டிரெஸ்ஸிங் ரூமில் தான் உரையாடியதை கம்பீர் ஒப்புக்கொண்டார். இதனால் சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அதிரடியாக நீக்கப்படுவார்கள் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது.

