உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணி மூன்றாவது போட்டியாக இன்று அமெரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கு உறுதியாக தகுதி பெரும்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்காக தற்போது சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஹர்திக் பாண்டியாவின் வெற்றி ரகசியம் குறித்து இந்திய அணியின் பேட்டிங் கோச் முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார்.
50 ஓவர் உலகக் கோப்பை பிறகு காயம் காரணமாக இந்திய அணியில் விளையாடத கார்த்திக் பாண்டியா அதன் பிறகு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற முதல் ஆட்டத்திலிருந்து லீக் சுற்றின் கடைசி ஆட்டம் வரை பாண்டியாவின் செயல்பாடு மிகவும் சுமாராகவே இருந்தது.
இதனால் இவரை வருகிற டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யக்கூடாது என்றும், அப்படி தேர்வு செய்தால் அது இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கும் என்று பல விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் யுவராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் போன்ற இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பாண்டியா இந்திய அணிக்காக விளையாடும் போது சிறப்பாக செயல்படுவார் என்று கூறினர். மேலும் பாண்டியாவின் சொந்த வாழ்க்கையிலும் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்ததால் அவரால் உலகக் கோப்பையில் நன்றாக செயல்பட முடியுமா? என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால் இவை அனைத்தையும் அடித்து நொறுக்கும் விதமாக இந்தியாவுக்காகவே செயல்படக் காத்திருந்தது போல பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு பாண்டியாவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தார். ஐபிஎல்லில் மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தியவர் எப்படி உலகக் கோப்பையில் திடீரென்று ஒரு மாற்றத்தை கொண்டு வர முடிந்தது என பலர் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.
இது குறித்து இந்திய அணியின் பேட்டிங் கோச் கூறும் பொழுது
“தன்னுடைய திறமையில் ஒரு துளி கூட எப்போதும் சந்தேகப்படக் கூடாது என்பதே பாண்டியாவின் தாரக மந்திரம் ஆகும். நீங்கள் எப்படிப்பட்ட வீரராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் உங்களுக்கும் ஒரு சறுக்கல் ஏற்படும். தொடர்ச்சியாக நன்றாக வீசினாலும் உங்களால் ஒரு டெக்னிக்கை பெற முடியாது. அவர் திரும்பவும் மீண்டு வருவார் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஒருவேளை அவர் சோர்ந்து போய் இருந்திருந்தால் அவர் எதையுமே செய்திருக்க மாட்டார். பாண்டியாவின் நெறிமுறைகளை நான் பின்பற்றியுள்ளேன்.
இதையும் படிங்க:இந்தியா, அமெரிக்கா போட்டி ரொம்ப உணர்ச்சிகரமாக இருக்கும்.. காரணம் இதுதான்.. கூறுகிறார் லக்ஷ்மிபதி பாலாஜி
ஒரு இரு போட்டிகளுக்கு பிறகு அவர் அதே ரிதத்தை பின்பற்றினால் பந்துவீச்சு நன்றாக வரும். அந்த ரிதத்தைப் பெற்றதால் தான் ஐபிஎல் தொடரிலும் உலகக் கோப்பையிலும் எப்படி செயல்படுகிறார் என்ற வித்தியாசத்தை உங்களால் பார்க்க முடிகிறது. இனி வரும் போட்டிகளில் பேட்டிங்கிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார். பாண்டியா ஏற்கனவே வங்கதேசம் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்களை விளாசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

