உலகக் கோப்பை டி20 தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அமெரிக்க அணிக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான போட்டி உணர்ச்சிகரமாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமிபதி பாலாஜி கூறியிருக்கிறார்.
அமெரிக்க அணி இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கவனிக்கத்தக்க முறையில் செயல்பட்டு வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அமெரிக்கா அடுத்த போட்டியில் கனடா அணிக்கு எதிராக விளையாடி அதில் வெற்றி கண்டது. தற்போது இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோத இருக்கிறது.
அமெரிக்கா அணியின் இந்த வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்கள் அமெரிக்க அணியில் இடம் பெற்று விளையாடுவது காரணமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சாளர் முதல் பேட்ஸ்மேன் வரை கிட்டத்தட்ட ஆறு வீரர்கள் தற்போது அமெரிக்க அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியோடு சேர்ந்து உலகக் கோப்பையை அமெரிக்க அணியும் நடத்துவதால் டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டி ரசிகர்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமான போட்டியாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான லட்சுமிபதி பாலாஜி கூறி இருக்கிறார். இதுகுறித்து பாலாஜி விரிவாக கூறும்பொழுது
“அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்த போட்டி மிகவும் முக்கியமானதாக கருதப்படும். ஏனென்றால் இப்போட்டியை 1.4 பில்லியன் மக்கள் பார்க்கப் போகிறார்கள்.
இந்த போட்டியில் அமெரிக்க அணி தங்களது பிராண்டு கிரிக்கெட்டை காட்ட முயற்சிக்கும். தங்களால் எந்த அளவு முடியுமோ அவ்வளவு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். நாம் அமெரிக்கா அணியில் விளையாடும் இந்திய வம்சாவளி வீரர்கள் பற்றி பேசுகிறோம். அது ஒரு குட்டி இந்திய அணி போன்று இருக்கிறது. நான் அமெரிக்கா அணியில் இரண்டு அமெரிக்க வீரர்களை சந்தித்தேன்.
இதையும் படிங்க:நியூயார்க் ஆடுகளத்திற்கு ஐபிஎல் கோலி வேண்டாம்.. இதற்கு அவர்தான் சரியாக இருப்பார்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து
அவர்கள் கிரிக்கெட் விளையாடும் விதத்தை இந்திய வம்சாவளி வீரர்களிடமிருந்து பின் தொடர்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் உத்வேகமும் ஊக்கமும் பெறுகிறார்கள். அமெரிக்க அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வீரர்களும், உள்நாட்டில் கிரிக்கெட் விளையாடிய வீரர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். இதனால் இந்த போட்டி நிச்சயமாக உணர்ச்சிகரம் மிகுந்த போட்டியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார். நியூயார்க் மைதானத்தில் தொடங்க உள்ள இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.

