இந்தியாவுக்கு லக்.. இந்த பையன் தீ மாதிரி பேட்டிங் பண்றான்.. அலிஸ்டர் குக் வியப்பு

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை அபாரமாகக் கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

இதில் குறிப்பாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, பின்னர் தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி ஒரு கட்டத்தில் 161/5 என்ற நிலையில் தத்தளித்த போது, அறிமுக வீரரான துருவ் ஜுரேல் நெருக்கடியான சூழ்நிலையிலும் அபாரமாக பேட்டிங் செய்து 90 ரன்கள் குவித்து இந்திய அணி 307 ரன்களைக் குவிக்க உதவினார்.

- Advertisement -

இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அழுத்தமான சூழ்நிலையை எதிர்கொண்டிருந்த போது, கில்லுடன் ஜோடி சேர்ந்த ஜூரேல் மீண்டும் சிறப்பாக விளையாடி 39 ரன்கள் குவித்து இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். சிறப்பாக விளையாடிய கில் அரை சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

இதன் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சிறப்பாகக் கைப்பற்றியுள்ளது. துருவ் ஜுரேலின் பேட்டிங் குறித்து பல கிரிக்கெட் பிரபலங்கள் பாராட்டி வரும் வேளையில், இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் அலைஸ்டர் குக் ஜூரேலின் பேட்டிகைப் பாராட்டி சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து உள்ளார். ஜூரேல் குறித்து குக் கூறுகையில்

“ஜுரேல் பந்தின் லென்த்தைக் கணித்து விளையாடுவதில் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். அவர் சரியான முடிவுகளை மிக வேகமாக எடுக்கிறார். முன்னும், பின்னும் கால்களை சரியாக நகர்த்தி பந்துகளை சரியாக கணித்து ஆடுகிறார். கில்லுடன் அவரது பார்ட்னர்ஷிப் மிகவும் அற்புதமாக இருந்தது.

- Advertisement -

கில் மற்றும் ஜூரேலின் பேட்டிங் பாணிகளுக்கு இடையேயான வேறுபாட்டைக் கூறினால் கில் இதில் சற்று வித்தியாசமாக விளையாடுகிறார். அவர் கால்களை நகர்த்துவதில் அவ்வளவு வேகம் காட்டுவதில்லை. ஆனால் கில் ஒரு தரமான கிளாஸ் பிளேயர். ஆனால் ஜூரேல் கால்களை சரியாக நகர்த்தி விளையாடும் விதத்தில் அற்புதமாகக் கவர்கிறார். அவர் இதே கூர்மையோடு இன்னும் முன்னோக்கி செல்ல வேண்டும்” என்று குக் கூறி இருக்கிறார்.

இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி தரம்சாலா மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. எனவே ஜூரேலின் இன்னொரு தரமான ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles