எங்கள் கோச் இவருக்கு மட்டும் எதையும் சொல்லித் தர மாட்டார்- இந்திய வீரர் அக்சார் பட்டேல் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -

ஆண்ட்டி குவா மைதானத்தில் நடைபெற உள்ள இப்போட்டிக்காக இந்தியா மற்றும் வங்கதேச அணி வீரர்கள் மிகத் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய வீரர் அக்சார் பட்டேல் பந்துவீச்சு பயிற்சியாளர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி இந்தத் தொடரில் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா என தொடர்ச்சியாக நான்கு அணிகளை வீழ்த்தி இன்று ஐந்தாவது போட்டியை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இன்னும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களே சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தனி ஆளாக நின்று எதிரணிகளை திறனறித்துக் கொண்டிருக்கிறார். முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ரா அடுத்த போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து அப்போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் நான்கு ஓவர்களில் ஏழு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த சூழ்நிலையில் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பம்ராவுக்கு மட்டும் எந்த விதமான பயிற்சிகளை வழங்க மாட்டார் என்று இந்திய ஆல்ரவுண்டர் அக்சார் பட்டேல் கூறி இருக்கிறார். இது குறித்து அக்சார் பட்டேல் விரிவாக கூறும் பொழுது ” பும்ராவின் பந்துவீச்சு பற்றி யாரும் அதிகமாக பேச மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதை அவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.

- Advertisement -

பும்ரா பயிற்சி பெறும்போதும் கூட பந்துவீச்சு பயிற்சியாளர் எந்தவிதமான உள்ளீடுகளையும் வழங்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் கூடுதல் தகவல்களை வழங்கினார் அவரது பந்து வீச்சில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே நீங்கள் நன்றாக செயல்படுகிறீர்கள் நீங்கள் என்ன நினைத்தாலும் அதை சிறப்பாக செய்கிறீர்கள் என்று மட்டும் தான் பயிற்சியாளர் கூறுவார்.

இதையும் படிங்க:விராட் கோலியிடம் நீங்கள் இதை கவனித்தீர்களா?. இந்தியா உலகக்கோப்பை வெல்ல நேரம் நெருங்கி விட்டது.. லாரா கருத்து

நான் பார்த்த வரையில் பும்ராவிடம் பயிற்சியாளர் அதிகநேரம் செலவிடுவதில்லை. நீங்கள் என்ன திட்டம் வைத்துள்ளீர்களோ அதையே செயல்படுத்துங்கள் என்று அவருக்கு சுதந்திரத்தை கொடுத்து விடுவார்கள். ஏனென்றால் ஜஸ்பிரித் பும்ரா ஒரு உலகத்தரமான பந்துவீச்சாளர்கள். மேலும் எங்களிடம் தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பதும் தெரியும். இதனால் நாங்கள் கடினமான சூழ்நிலைகளையும் கடந்து வருவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles