விராட் கோலியிடம் நீங்கள் இதை கவனித்தீர்களா?. இந்தியா உலகக்கோப்பை வெல்ல நேரம் நெருங்கி விட்டது.. லாரா கருத்து

டி20 உலக கோப்பையில் இந்திய அணி கம்பீரமாக நான்கு வெற்றிகளை பெற்று இன்று வங்கதேச அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் களமிறங்கி விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த சூப்பர் 8 போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆன லாரா, விராட் கோலி குறித்தும் இந்திய அணி குறித்தும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி அனைத்து துறைகளிலும் பலமாக காணப்பட்டாலும் பேட்டிங் வரிசையில் சற்று தடுமாற்றம் இருக்கிறது. இதற்குக் காரணம் மூன்றாவது வரிசையில் களமிறங்கி விளையாடிக் கொண்டிருக்கிற விராட் கோலியை ஐபிஎல் தொடரில் ஓப்பனிங் களமிறங்கி சிறப்பாக விளையாடினார் என்ற காரணத்திற்காக இந்த டி20 உலக கோப்பையிலும் அவரை ஒப்பனிங் அனுப்பியது. விளைவு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை தவிர மற்ற மூன்று போட்டிகளுக்கும் சேர்த்து ஐந்து ரன்கள் மட்டுமே அடித்தார்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் 24 பந்துகளில் 24 ரன்கள் குவித்து வெளியேறினார். இதனால் விராட் கோலி பேட்டிங் ஃபார்ம் இன்றி தவித்து வருவதால் அவரை திரும்பவும் மூன்றாவது இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சனங்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டியில் விராட் கோலி திரும்பவும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவாரா? அல்லது ஓப்பனிங் களம் இறங்கி விளையாடுவாரா? என்பது ரோகித் சர்மாவின் கைகளில் மட்டுமே இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி குறித்தும் விராட் கோலியின் பேட்டிங் வரிசை குறித்தும், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாரா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து லாரா கூறும்பொழுது
“விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தது குறைவானது என்று கூறலாம். ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்துப் பார்த்தால் புரியும். விராட் கோலி கடந்த மூன்று போட்டிகளை விட இந்த போட்டியில் மைதானத்தில் அதிக நேரம் செலவிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:இவரது பேட்டிங் எனக்கு திருப்திகரமாக இல்லை.. இன்னைக்கு ஏதாவது பண்ணுவார்னு நம்புகிறேன்.. பேட்டிங் கோச் பேட்டி

இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு நேரம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன். விராட் கோலி வலிமையிலிருந்து மேலும் வலிமைக்கு சென்று கொண்டிருக்கிறார். அவர் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறார். இதனால் கரீபியன் மீதானங்களில் அவருக்கு எப்படி விளையாட வேண்டும் என்பது நன்கு தெரியும். மேலும் அடுத்து வரும் போட்டிகள் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதால் அவர் தனது சிறந்த பேட்டிங்கை காட்டப் போகிறார் என்று நினைக்கிறேன். இதனால் ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகம் பொறுமையாக இருக்க வேண்டும். இன்னும் நிறைய ஆட்டங்கள் இருப்பதால் விராட் கோலி நிச்சயம் மீண்டு வருவார்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles