இவரது பேட்டிங் எனக்கு திருப்திகரமாக இல்லை.. இன்னைக்கு ஏதாவது பண்ணுவார்னு நம்புகிறேன்.. பேட்டிங் கோச் பேட்டி

இன்று நடைபெற உள்ள சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் சில பேட்டிங் செயல்பாடுகள் தனக்கு திருப்திகரமாக இல்லை என்று சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது நான்கு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இன்று நடைபெற உள்ள ஐந்தாவது போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி ஏறக்குறைய அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். அதனால் இந்திய அணி வீரர்கள் முழு வீச்சில் தயாராகி வருகிறார்கள்.

- Advertisement -

மேலும் வங்கதேச அணியும் முதல் சுற்றில் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டது. அடுத்த சுற்றில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தோல்வியில் இருந்து மீண்டு வர இந்த போட்டியில் வங்கதேசம் அணி கட்டாயம் வெற்றி பெற முயற்சிக்கும். ஏனெனில் இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே வங்கதேச அணி அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். இதனால் இந்திய அணியை விட கூடுதல் அழுத்தத்தில் வங்கதேச அணியினர் இருக்கின்றனர்.

இந்திய அணி அனைத்து துறைகளிலும் சமமாக விளங்கினாலும் பேட்டிங் மட்டும் சரிவாக இருப்பது போல் தெரிகிறது. ஏனெனில் இந்திய அணிக்கு இன்னும் ஓபனிங் சரியாக கிளிக் ஆகவில்லை. விராட் கோலி ஓப்பனிங்கில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். மேலும் அவரைத் தவிர ரோகித் சர்மாவும் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருக்கிறார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பேட்டிங் பங்களிப்பினால் மட்டுமே இந்திய அணி தற்போது வெற்றிகளை பெற்று வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும்பொழுது “விராட் கோலியின் பேட்டிங் செயல்பாடுகளில் தனக்கும் திருப்திகரமாக இல்லை. எனவே இனிவரும் போட்டிகளில் அவர் தனது பழைய பேட்டிங் பார்மை மீட்டு எடுப்பார் என்று நம்புகிறேன். மேலும் எல்லா வீரர்களுக்கும் சரிவு என்று சில காலம் இருக்கும். இந்திய ஆடுகளத்தில் அதிகமாக பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத இந்திய வீரர்கள் தற்போது இந்த மண்ணில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திறம்பட விளையாடுகிறார்கள். இதனை பார்ப்பதற்கு தற்போது மகிழ்ச்சிகரமாக இருக்கிறது.

இதையும் படிங்க:இந்திய அணிக்கு இந்த வீரர் கடவுள் தந்த பரிசு.. கூறுகிறார் இந்திய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு

இந்திய அணியில் எப்போதுமே திறமையான வீரர்களுக்கு பஞ்சம் இல்லை. ஆன்ட்டிகுவா மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இந்திய அணி மூன்று கூடுதல் சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி விளையாடுகிறது. அதனால் இன்றைய போட்டியிலும் இந்திய அணி ஸ்பின்னர்களுடன் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. எட்டாவது பேட்ஸ்மேன் ஆக அக்சார் பட்டேல் வரும்போது அது ரோகித் சர்மாவுக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கிறது. அவர் பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக பங்களிக்க கூடிய வீரராக இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles