82வது சதம்.. விராட் கோலியின் விஸ்வரூபத்தால் இந்தியா அபார வெற்றி.. வீட்டுக்கு செல்லும் பாகிஸ்தான்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னராக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

பின்னர் இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணைக் கேப்டன் சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ரோகித் சர்மா அதிரடியாக சிக்சரும், பவுண்டரியும் அடித்த போது, ஷாகின் அப்ரிடி வேகத்தில் போல்டாகி 20 ரன்களில் பெவிலியனை நோக்கி நடையை கட்டினார். இதையடுத்து சுப்மன் கில் – விராட் கோலி கூட்டணி இணைந்தது.

- Advertisement -

விராட் கோலி சாதனை

- Advertisement -

இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்த போது, சுப்மன் கில் அரைசதத்தை நெருங்கினார். ஆனால் 46 ரன்கள் எடுத்திருந்த போது அப்ரார் அஹ்மத் பந்தில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் போல்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி – ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இணைந்து கொண்டது.

இதன்பின் விராட் கோலி பொறுப்பை எடுத்து கொண்டு தேவைக்கு ஏற்ப பவுண்டரியை விளாசினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் சீராக முன்னேற்றம் அடைந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் தன் பங்கிற்கு சில பவுண்டரிகளை அடிக்க, பாகிஸ்தான் பவுலர்களால் இவர்களை பிரிக்க முடியவில்லை. சிறப்பாக ஆடிய விராட் கோலி தனது 74வது அரைசதத்தை அடித்தார்.

- Advertisement -

82வது சதம்

இதன்பின் விராட் கோலி கியரை மாற்றி அதிரடிக்கு திரும்பினார். அதேபோல் ஸ்பின்னர்கள் பந்தை சிக்சராக விளாசி ஸ்ரேயாஸ் ஐயரும் தனது 21வது அரைசதத்தை நிறைவு செய்தார். இதனால் இந்திய அணியின்  ஸ்கோர் 200 ரன்களை கடந்து சென்றது. இருவரும் ஆட்டத்தை முடிப்பார்கள் என்று பார்க்கப்பட்ட போது, ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணியின் வெற்றிக்கு 19 ரன்களே தேவையாக இருந்தது. அப்போது அக்சர் படேல் களமிறங்க, மறுமுனையில் விராட் கோலி சதம் அடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. சிறப்பாக ஆடிய விராட் கோலி தனது 52வது ஒருநாள் சதத்தை விளாசி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles