இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான விவாதங்கள் தற்போது ஆரம்பித்து விட்டன.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கூறிய கருத்துக்கு இந்திய அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறும் மிக முக்கிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த முறை இந்தத் தொடரை எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற உத்வேகத்தில் ஆஸ்திரேலிய அணியினர் இருக்கின்றனர். இதனால் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் சில வீரர்கள் இந்த தொடருக்காக தற்போது ஓய்வு எடுத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ரிக்கி பாண்டிங் இந்த முறை இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று கூறியிருந்தார். பாண்டிங் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாஸித் அலி இந்திய அணிக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து பாசித் அலி விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியா அணி தனது மைண்ட் கேமை இப்போது ஆரம்பித்து விட்டது. இதனை இந்திய அணியும் நன்கு அறிந்திருக்கும். ஆனால் இந்திய அணியை வீழ்த்துவது என்பது தற்போது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்போது உள்ள இந்திய அணிக்கும் இப்போது இருக்கும் அணிக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது.
இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி,பும்ரா, சிராஜ், ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, ஷமி என ஆறு முக்கிய வீரர்கள் இந்திய அணிக்கு இருக்கிறார்கள். இவர்கள் இல்லாமல் போனால் மட்டுமே இந்திய அணியை ஏதாவது செய்ய முடியும். அப்படி இல்லாத பட்சத்தில் வெற்றி வாய்ப்பு இந்தியாவுக்கு தான்” என்று பாசித் அலி இந்தியாவுக்கு ஆதரவாக கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ரொம்ப பேசாதீங்க பாண்டிங்.. 10 வருஷத்த ஞாபகம் வச்சுதான் இந்திய டீமை அப்படி சொன்னீங்களா.. ரவி சாஸ்திரி பதிலடி
இந்தியா ஆஸ்திரேலியா மோதும் இந்த தொடர் இரண்டு நாட்டு ரசிகர்களிடையே மட்டும் இன்றி உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையேயும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி வெற்றி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

