ரொம்ப பேசாதீங்க பாண்டிங்.. 10 வருஷத்த ஞாபகம் வச்சுதான் இந்திய டீமை அப்படி சொன்னீங்களா.. ரவி சாஸ்திரி பதிலடி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகின்ற நவம்பர் மாதம் தொடங்கி 2025 ஆம் வருடம் ஜனவரி மாதம் வரை நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா மீண்டும் கைப்பற்றி ஆஸ்திரேலியா மண்ணில் ஹாட்ரிக் வெற்றி பெறும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

கடந்த 10 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வலுவானதாக திகழ்கிறது. இதன் காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரை நவீன காலத்தின் ஆஷஸ் தொடர் என கிரிக்கெட் விமர்சகர்கள் அழைக்கின்றனர். தங்களது சொந்த நாட்டில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தது.

- Advertisement -

எனினும் கடந்த 2 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணங்களிலும் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த வருட இறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நவம்பர் 23ஆம் தேதி பிரிஸ்பேனில் வைத்து நடைபெற உள்ளது. கடந்த 2021 ஆம் வருடம் இதே பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலிய விற்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் கோட்டை என கருதப்பட்ட காபா மைதானத்தில் 32 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது. இந்த முறை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியை வீழ்த்தி பழி தீர்க்க வேண்டும் என ஆஸ்திரேலியா அணியினர் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்த முறை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் என தெரிவித்திருக்கிறார். அவரது கருத்திற்கு இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசி இருக்கும் ரவி சாஸ்திரி ” இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் 5 போட்டிகளைக் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பு மற்றும் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். இந்த முறையும் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றி ஆஸ்திரேலியா மண்ணில் ஹாட்ரிக் வெற்றி பெறும். கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கடந்த 2 ஆஸ்திரேலிய சுற்றுப் பயணங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இந்த முறையும் அவர்கள் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று தங்களது ஆதிக்கத்தை தொடர்வார்கள். ஏனெனில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவதற்கான பலம் வாய்ந்த பந்துவீச்சு இந்தியாவிற்கு இருக்கிறது. இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய தொடருக்கு பிட்டாக இருப்பார்கள். இந்திய அணியின் பேட்ஸ்மேன் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 2 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றும் போது இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ரவி சாஸ்திரி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆஸ்திரேலியா பயணத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் காயம் அடைந்த நிலையிலும் இளம் வீரர்கள் போராடி காபா மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles