மீண்டும் சந்திக்கும் இந்தியா – பாகிஸ்தான்.. டி20ஐ உலகக் கோப்பை தொடர் அட்டவணை அறிவிப்பு.. !

இந்த ஆண்டு ஐசிசி தொடராக டி20ஐ உலகக் கோப்பை நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இதனை எடுத்து நடத்துகின்றனர். அமெரிக்காவில் கிரிக்கெட் நல்ல வளர்ச்சியைக் கான வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

வருகிறது ஜூன் மாதம் ஐ.பி.எல் தொடருக்கு பிறகு இந்த மெகா டி20ஐ திருவிழா தொடர்கிறது. இந்தத் தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. அதற்கான அட்டவணையும் இன்று வெளியாகியுள்ளது. ஜூன் 1 ஆம் தேதி துவங்கும் இந்தத் தொடர் ஜூன் 29 வரை நீடிக்கும். முதல் போட்டியில் இரண்டாவது தொகுப்பாளரான அமெரிக்கா அணி கனடாவை எதிர்க்கிறது.

- Advertisement -

இம்முறை பெரிய அணிகள் முதல் சுற்றில் மூன்று சிறிய அணிகளுடன் மோதுகிறது. அதற்கேற்றவாறு அணிகள் நான்கு பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி முதல் பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுடன் மோதவுள்ளது.

- Advertisement -

பிரிவு ஏ – இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா.
பிரிவு பி – இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்.
பிரிவு சி – நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாபுவா நியூ கினியா.
பிரிவு டி – தென்ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபால்.

இந்திய அணி தொடரை ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக துவங்குகின்றனர். அதன் பின்னர் அதிக கவனம் ஈர்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஜூன் 9ஆம் தேதி நடக்கிறது. பிறகு 12ஆம் தேதி அமெரிக்கா, 15ஆம் தேதி கனடா ஆகிய அணிகளை சந்திக்கிறது. இந்திய அணி கடைசிப் போட்டியை மட்டும் ஃப்ளோரிடாவில் விளையாடுகிறது, மற்ற போட்டிகள் அனைத்தும் நியூயார்க்கில் நடைபெறுகிறது.

- Advertisement -

18ஆம் தேதி வரை நடக்கும் இந்தச் சுற்றின் ஒவ்வொரு பிரிவுகளிலும் டாப் 2 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும். அனைத்துச் சூப்பர் 8 போட்டிகளும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் ஜூன் 24 வரை நடைபெறவிருக்கிறது. பிறகு அரை இறுதிப் போட்டிகள் 26 ஜூன் மற்றும் 27 ஜூன். இறுதிப் போட்டி 29ஆம் தேதி கோலாகலமாக நடக்கிறது.

டி20ஐ உலகக் கோப்பையில், 2007 எம்.எஸ்.தோனிக்குப் பிறகு இந்திய அணி மூன்று முறை அரை இறுதிப் போட்டி மற்றும் ஒரு முறை இறுதிப் போட்டியில் சோக் செய்து இந்திய வீரர்கள் திரும்பியுள்ளனர். பல ஆண்டுகளாக உலகக் கோப்பை வெற்றிக்காக இந்திய ரசிகர்கள் துடிக்கின்றனர். அண்மையில் கூட கிட்ட வந்து இழந்தனர். 2024ல் ரோஹித் ஷர்மா & கோ வெற்றிக் கனியை பறிப்பர் என எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles