2025ஆம் ஆண்டு இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணை விவரம்

2025 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு தொடர்களில் விளையாட இருக்கிறது. குறிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆசிய கோப்பை தொடர் என இரு முக்கிய தொடர்களில் விளையாடுகிறது. அது மட்டும் இல்லாமல் 2025 ஆம் ஆண்டில் மிகப்பெரிய தொடராக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

இந்த சூழலில் புத்தாண்டில் இந்திய அணி எந்தெந்த போட்டிகளில் விளையாடுகிறது என்பதை தற்போது பார்க்கலாம். ஜனவரி மாதம் மூன்றாம் தேதி சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அதே ஜனவரியில் 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி, அதன் பிறகு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அதில் பங்கேற்கும். அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இந்திய அணி, ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

- Advertisement -

அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக இருந்து டெஸ்ட் போட்டிகளும்,அதன் பிறகு அக்டோபர் இறுதியில் இருந்து நவம்பர் மாதம் வரை ஆசிய கோப்பை டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. நவம்பர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணி நவம்பர் மற்றும் டிசம்பர் இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாடுகிறது. எந்தெந்த தேதியில் எந்த போட்டிகள் நடைபெறுகிறது என்பது குறித்து பாதி அட்டவணை வெளியாகியிருக்கிறதுஅதனை தற்போது பார்க்கலாம்.

இந்தியா vs ஆஸ்திரேலியா, 5வது பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் – ஜனவரி 3-7 (சிட்னி)

- Advertisement -

இந்தியா vs இங்கிலாந்து (5 டி20ப, 3 ஒருநாள்) — ஜனவரி-பிப்ரவரி 2025

1வது டி20: ஜனவரி 22 (சென்னை)

2வது டி20: ஜனவரி 25 (கொல்கத்தா)

3வது டி20: ஜனவரி 28 (ராஜ்கோட்)

4வது டி20: ஜனவரி 31 (புனே)

5வது டி20: பிப்ரவரி 2 (மும்பை)

1வது ஒருநாள் போட்டி: பிப்ரவரி 6 (நாக்பூர்)

2வது ஒருநாள் போட்டி: பிப்ரவரி 9 (கட்டாக்)

3வது ஒருநாள் போட்டி: பிப்ரவரி 12 (அகமதாபாத்)

சாம்பியன்ஸ் டிராபி — பிப்ரவரி-மார்ச் 2025

இந்தியா vs வங்கதேசம்: பிப்ரவரி 20 (துபாய்)

இந்தியா vs பாகிஸ்தான்: பிப்ரவரி 23 (துபாய்)

இந்தியா vs நியூசிலாந்து: மார்ச் 2 (துபாய்)

அரையிறுதி (தகுதி பெற்றிருந்தால்): மார்ச் 4 (துபாய்)

இறுதி (தகுதி பெற்றிருந்தால்): மார்ச் 9 (துபாய்)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி (தகுதி பெற்றிருந்தால்) – ஜூன் 2025 (லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்)

இந்தியா vs இங்கிலாந்து (5 டெஸ்ட்) — ஜூன்-ஆகஸ்ட் 2025 (வெளியே)

1வது டெஸ்ட்: ஜூன் 20-24 (ஹெடிங்லி)

2வது டெஸ்ட்: ஜூலை 2-6 (எட்ஜ்பாஸ்டன்)

3வது டெஸ்ட்: ஜூன் 10-14 (லார்ட்ஸ்)

4வது டெஸ்ட்: ஜூன் 23-27 (மான்செஸ்டர்)

5வது டெஸ்ட்: ஜூலை 31-ஆகஸ்ட் 4 (ஓவல்)

இந்தியா vs வங்கதேசம் (3 ஒருநாள், 3 டி20) — ஆகஸ்ட் 2025 (வெளி நாட்டில்)

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் (2 டெஸ்ட்) — அக்டோபர் 2025

ஆசிய கோப்பை டி20கள் — அக்டோபர்-நவம்பர் 2025

இந்தியா vs ஆஸ்திரேலியா (3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள்) — நவம்பர் 2025 (வெளி நாட்டில்)

இந்தியா vs தென்னாப்பிரிக்கா (2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள்) — நவம்பர்-டிசம்பர் 2025

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles