வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்தியா.. பும்ரா அபாரமான பந்துவீச்சு.. ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பையில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாறு படைத்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி குறைந்த ரன்கள் அடித்த வரிசையில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். அபாரமாக பந்து வீசிய இந்திய அணியின் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முக்கியமான டி20 போட்டி நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மழையின் காரணமாக ஆட்டம் தொடங்க சிறிது நேரம் தடைபட்டாலும், அதன் பிறகு இந்திய அணியின் இன்னிங்சை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

- Advertisement -

கோலி நான்கு ரன்கள் குவித்த நிலையில் நசீம் ஷாவின் பந்துவீச்சில் வெளியேற, அவரைத் தொடர்ந்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 13 ரன்களில் அப்ரீடியின் பந்துவீச்சில் வெளியேறினார். அதன் பிறகு ரிஷப் பண்ட் மற்றும் அக்சார் பட்டேலின் பேட்டிங் கூட்டணியே இந்த இன்னிங்ஸ் அதிகபட்ச கூட்டணியாக அமைந்தது. இந்த ஜோடி 30 பந்துகளுக்கு 39 ரன்கள் குவித்தது.

பட்டேல் 18 பந்துகளில் 20 ரன்கள் குவித்து வெளியேற, அதற்குப் பின்னர் களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் ஏழு ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு களம் இறங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் விரைவிலேயே வெளியேற, இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 31 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் 42 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அதன் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என்று அனைவரும் கருதினர். ஆனால் இந்திய அணியின் அபாரமான வேகப்பந்துவீச்சினை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி ரன்கள் எடுக்க முடியாமல் திணறியது. அதிலும் குறிப்பாக பும்ராவின் வேகப்பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி ரன்கள் குவிக்கவே முடியவில்லை.

இதையும் படிங்க:பாகிஸ்தான் போட்டியில் இவங்க 2 பேர் முக்கியமான பிளேயர்கள்.. இவரை உள்ளே கொண்டு வாங்க.. காரணம் கூறுகிறார் ஹர்பஜன் சிங்

தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் மட்டுமே அதிகபட்சமாக 44 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். அதன் பிறகு விளையாடிய எந்த பேட்ஸ்மேனாலும் பாகிஸ்தான அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அபாரமாக பந்து வீசிய பும்ரா நான்கு ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles