டி20 உலக கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியமான போட்டி நாளை நடைபெற உள்ளது. வெற்றிப்பாதையில் பயணிக்கும் இந்திய அணியும்,தோல்வி பாதையில் பயணிக்கும் பாகிஸ்தான் அணியும் மோதுவதால் இப்போட்டி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த போட்டியில் இந்திய அணி பிரதான சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவில்லை. இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுழற் பந்துவீச்சு பெரும்பங்கு வகிக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் கூறியிருக்கிறார்.
கடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடிய போது பிரதான சுழற் பந்துவீச்சாளர்கள் என்று யாரையும் பயன்படுத்தவில்லை. மாறாக ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோரையே இந்திய அணி சுழற் பந்துவீச்சில் பயன்படுத்தியது. மேலும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் வேகப்பந்து வீச்சில் அதிகமாக விக்கெட்டுகள் வீழ்த்தன.
மேலும் பாகிஸ்தான் அணியிலும் நான்கு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் அது நிச்சயமாக இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் இந்திய அணி பேட்டிங் வரிசையையும் நீடிக்க வேண்டிய அவசியத்தையும் இப்போட்டி ஏற்படுத்தி இருக்கிறது. நாளைய போட்டியில் சூரியகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும், சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவை அணியில் எடுக்க வேண்டும் என்றும் இந்திய முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஹர்பஜன் சின் விரிவாக கூறும்போது
“போட்டி நடைபெறும் நியூயார்க் மைதானத்தில் இந்திய அணி ஏற்கனவே விளையாடியுள்ளது. இதனால் ஆடுகளம் குறித்த புரிந்துணர்வு இந்திய அணிக்கு முன்பே இருக்கக்கூடும். தட்டையான ஆடுகளத்தில் இதுவரை பாகிஸ்தான் அணி விளையாடி உள்ளது. அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளதால் இந்த மைதானத்தின் சூழ்நிலையை பாகிஸ்தான் அணி உணர கடினமாக இருக்கும்.
மேலும் இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் மேட்ச் வின்னர் ஆக இருப்பார்கள். மேலும் இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் விளையாட வேண்டியது அவசியம். பேட்டிங் வரிசையை நீளப்படுத்தவே அக்சார் பட்டேல் கடந்த போட்டியில் விளையாடியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:விராட் கோலி அபாயகரமான வீரர்தான்.. ஆனால் இந்த ஒரு விஷையத்தை மட்டும் கம்மி பண்ணிக்கணும்.. முகமது கைப் அறிவுரை
ஹர்பஜன் சிங் கூறியதைப் போலவே இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான தனது முதல் பயிற்சி போட்டியையும், அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணி அமெரிக்காவின் டாலஸ் நகரில் முதல் தோல்வியை சந்தித்து தற்போது நியூயார்க் மைதானத்திற்கு வருகிறது. இதனால் பாகிஸ்தான் அணியை விட இந்திய அணிக்கே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

