விராட் கோலி அபாயகரமான வீரர்தான்.. ஆனால் இந்த ஒரு விஷையத்தை மட்டும் கம்மி பண்ணிக்கணும்.. முகமது கைப் அறிவுரை

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் முக்கியத்துவம் இந்த போட்டியாக இந்தியா, பாகிஸ்தான் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இதற்காக இரண்டு அணிகளும் மிக தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன.

- Advertisement -

நியூயார்க்கில் போட்டி நடைபெறுவதால் இப்போட்டிக்கான ரசிகர்கள் கூட்டம் மைதானத்தில் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை இந்திய அணியின் ஆதிக்கமே இதுவரை மேலோங்கி இருக்கிறது. 2021ஆம் ஆண்டு ஒரே ஒருமுறை மட்டுமே துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது.

- Advertisement -

2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணியே வெல்ல வேண்டியது. ஆனால் விராட் கோலி ஒற்றை ஆளாக நின்று கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச் சென்று அபாரமாக விளையாடினார். இதன்மூலம் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக மட்டுமல்ல விராட் கோலி உலகின் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் ஆபத்தான வீரராக இருக்கிறார்.

- Advertisement -

அது இந்திய மைதானமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு மைதானமாக இருந்தாலும் சரி உலகின் எந்த மூலையிலும் தனது அபார பேட்டிங் மூலம் எதிரணியை வெல்லக் கூடியவர். இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் கடந்த அயர்லாந்து அணிக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி அதிரடியாக விளையாட போய் ஒரு ரன்னில் வெளியேறினார்.

இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் விராட் கோலி தனது ஆக்ரோசத்தை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார் இது குறித்து முகமது கைப் மேலும் கூறும்பொழுது
“விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக மட்டுமல்ல உலகின் அனைத்து அணிகளுக்கும் ஆபத்தான வீரராக இருக்கிறார். இதனால் இவரை ஆட்டமிழக்க செய்வது என்பது எளிதான விஷயமாக இருக்காது.

- Advertisement -

இருந்தாலும் விராட் கோலி தன்னுடைய ஆக்ரோசத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து. கடந்த போட்டியில் அவர் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குக் காரணம் அதிரடியாக விளையாட போய் தனது விக்கட்டை பறி கொடுத்தார். விராட் கோலி தற்போது மிகச் சிறந்த பார்மில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் 700 ரன்கள் அடித்து சாதனையும் புரிந்துள்ளார். விராட் கோலி பவர் பிளேவில் எப்படி அடித்து ஆடினார் என்பதை பார்த்தோம்.

இதையும் படிங்க:பேட்டிங் ஆர்டர்ல இந்தியா பெரிய தப்பு பண்ணிருக்கு.. அதனால வெற்றி வாய்ப்பு எங்களுக்குதான்.. கம்ரான் அக்மல் பேட்டி

விராட் கோலியால் எல்லாவிதமான ஷாட்களையும் விளையாட முடியும். ஆடுகளம் தற்போது அபாயமாக இருப்பதால் விராட் கோலி தன்னுடைய அதிரடியை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 130 ஸ்ட்ரைக் ரைட்டில் இந்த ஆடுகளத்தில் விளையாடினால் போதும் என்று நினைக்கிறேன். 140-150 ஸ்டிரைக் ரைட்டில் கூட விளையாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதே ஸ்டிரைக் ரேட்டில் விராட் கோலி 70 ரன்கள் அடித்தால் கூட இந்த ஆடுகளத்தில் இந்திய அணிக்கு பெரிதாக உதவும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles