இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை அடுத்து தற்போது ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதன் பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்டரில் விளையாடுகிறது. ரோஹித் சர்மா இந்திய அணிக்குத் தலைமை தாங்க உள்ளார். இஷான் கிஷான் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய வரவாக துருவ் ஜுரேல் இந்திய அணியில் அறிமுகம் ஆகிறார்.
இங்கிலாந்துக்கு எதிராக ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய அகில இந்திய மூத்த தேர்வுக் குழு 5ம் தேதி கூடியது. அஜித் அகர்கர் தலைமையிலான அக்குழுவில் கேப்டனாக ரோகித் சர்மா கலந்து கொண்டார். இஷான் கிஷான் மீது சமீபத்தில் ஒழுக்கக் குறைபாடு காரணமான செய்திகள் வெளிவரத் தொடங்கியது.
பெங்காலி செய்தித்தாள் ஆனந்த பஜார் பத்ரிகாவில் வெளியான செய்தியில், இஷான் கிஷான் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக தென்னாப்பிரிக்கத் தொடரில் ஓய்வு கேட்டிருந்தார் என்றும், ஆனால் துபாயில் நடைபெற்ற பார்ட்டியில் வினாடி வினா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தேர்வாளர்கள் மத்தியில் குழப்பம் அடையச் செய்துள்ளது. எனவே இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே எல் ராகுல் தொடர்கிறார். அவருக்குத் துணை விக்கெட் கீப்பராக கே எஸ் பரத் இருக்கிறார். மேலும் புதியதாக மேலும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்டராக துருவ் ஜுரேல் இந்திய அணியில் அறிமுகம் ஆகிறார்.
மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி டிராபியில் விளையாடாமல் ஓய்வு கேட்டதால் ஒழுக்கக் குறைபாடு காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டார் என்ற செய்திகள் வெளியாகின. எனினும் ஆந்திராவுக்கு எதிராக உள்நாட்டு அணியில் விளையாடிய பிறகு இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஸ்பின்னர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் ஆகியோர் உள்ளனர். இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இரு போட்டிகளுக்கான இந்திய அணி குறித்த முழு விபரம் இதோ :
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கீப்பர்), கே.எஸ்.பாரத் (கீப்பர்), துருவ் ஜூரல் (கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (விசி), அவேஷ் கான்.

