வீடியோ- பெவிலியன் திரும்பிய கோலியை கிண்டல் செய்த ஆஸி. ரசிகர்! ஜல்லிக்காட்டு காளையாக மாறிய கோலி.. என்ன நடந்தது?

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. இந்த சூழலில் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் முதல் டெஸ்டில் விராட் கோலி அபார சதம் அடித்த நிலையில், அதன் பிறகு அவருக்கு போதாத காலமாக அமைந்திருக்கிறது. பேட்டிங்கிலும் ரன்கள் வரவில்லை, தேவையில்லாத சர்ச்சைகளிலும் விராட் கோலி சிக்கியிருக்கிறார். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் போது 19 வயது வீரரான ஷாம் கோன்ஸ்டாஸ் உடம் விராட் கோலி மோதிய விவகாரத்தில் அவருக்கு போட்டியில் இருந்து 20% அபராதமும் விதிக்கப்பட்டது.

- Advertisement -

இதனால் ஒட்டு மொத்த ஆஸ்திரேலிய ரசிகர்களும் விராட் கோலி மீது செம கடுப்பில் இருக்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் கூட விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தபோது அவருக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் விராட் கோலி இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பேட்டிங் செய்ய வந்து ரன்கள் எடுக்க முற்பட்டார்.

- Advertisement -

விராட் கோலியும், ஜெய்ஸ்வாலும் அபாரமாக விளையாடி மூன்றாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தனர். 82 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டில் ஜெய்ஸ்வால் சிக்கினார். அதன் பிறகு விராட் கோலியும் 36 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் தான் விராட் கோலி சொதப்பிவிட்டோமே என்ற சோகத்தில் பெவிலியன் நோக்கி சென்றார்.

அப்போது மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள், விராட் கோலியை கேலி கிண்டல் செய்தனர். முதலில் இதை காதில் வாங்காமல் சென்ற விராட் கோலி திடீரென்று கடுப்பாகி பெவிலியனிலிருந்து வெளியே வந்து ரசிகர்களை பார்த்து முறைத்தார். இதனால் நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த ஆஸ்திரேலிய பாதுகாப்பு அலுவலர்கள் உடனே விராட் கோலியை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

- Advertisement -
https://twitter.com/JohnyBravo183/status/1872541597625385153?t=jDXCDq14WGg8w_60ROLaQg&s=19

ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து காலை சீறி வெளியே வருவது போல் விராட் கோலியும் கோபத்தில் வெளியே வந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிறது. இதனிடையே, விராட் கோலியை கோமாளி கோலி என பதிவிட்டு ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து விராட் கோலியை குறிவைத்து ஆஸ்திரேலிய ரசிகர்களும் ஊடகங்களும் செயல்பட்டு வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles