ஏமாற்று வேலையின் உச்சம்! கேட்ச் பிடித்ததாக அவுட் கேட்ட ஸ்மித்.. 3ஆம் நடுவரிடம் கொத்தாக சிக்கிய ஆஸ்திரேலியா.. சர்ச்சையான கோலி நாட் அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஸ்மித் கேட்ச் பிடித்து விட்டதாக அப்பீல் செய்து நாடகமாடியது அம்பலமானது. கிரிக்கெட் உலகில் எப்போதுமே ஏமாற்று வேலைகளில் கில்லாடியாக ஆஸ்திரேலிய வீரர்கள் திகழ்வார்கள்.

- Advertisement -

நடுவர்களை ஏமாற்றி எதிரணியை ஏமாற்றி விக்கெட்டுகள் எடுப்பது என்பது ஆஸ்திரேலியாவுக்கு கைவந்த கலை. தவறை செய்தாலும் அது குறித்து கவலை கொள்ள மாட்டார்கள். இந்த நிலையில் அப்படி ஒரு சம்பவம் தான் நடைபெற்றது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் ஒன்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், ராகுல் நான்கு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி 17 ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த விராட் கோலி போலந்து வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட போது ஸ்லிப்பில்  கேட்ச் ஆனார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா வீரர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட விராட் கோலி களத்தை வீட்டு நகராமல் நின்றார். இதனை அடுத்து நடுவர்கள் என்ன நடந்தது என மூன்றாம் நடுவரின் உதவியை நாடி இது அவுட்டா இல்லையா என கேட்டனர். அப்போது இதன் ரிப்ளே வை பார்த்தபோது பந்தை ஸ்மித் பிடிக்க முயன்ற போது வெறும் இரண்டு விரல் தான்  பந்தில் இருந்தது. அப்போது பந்து மைதானத்தில் லேசாக பட்டது.

இதனை அடுத்து ஸ்மித் அருகில் இருந்த லாபஸ்செனிடம் பந்தை தூக்கி எறிய லாபஸ்சென் கேட்சை நிறைவு செய்தார். ஆனால் பந்து கீழே பட்டது தெள்ளத் தெளிவாக வீடியோ ஆதாரத்தில் சிக்கியது. இதனால் இதனை நாட் அவுட் என நடுவர் அறிவித்தார்.இதனால் கோல்டன் டக்காக இருந்த விராட் கோலி 17 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்மித், நான் இந்த கேட்சை 100% பிடித்தேன். அது கேட்ச் தான் என்று மீண்டும் கூறியிருக்கிறார். வீடியோ ஆதாரத்தில் சிக்கிய பிறகும் அவர் நம்பிக்கையுடன் ஸ்மித் கூறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. எனினும் இது கேட்ச் தான் என்று ஆஸ்திரேலியா ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் சிட்னி டெஸ்ட் தொடக்கமே விறுவிறுப்பு அடைந்து இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles