சிட்னி டெஸ்டிலிருந்து விலகிய பும்ரா.. மருத்துவமனைக்கு ஸ்கேன் பரிசோதனைக்கு சென்றதால் இந்திய அணி ரசிகர்கள் கலக்கம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா காயம் காரணமாக விலகி இருப்பது ரசிகர்களை கலக்கமடைய செய்திருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது.

- Advertisement -

இதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி களம் இறங்கி உள்ளது. இதன் காரணமாக இந்த தொடரில் சரியாக பேட்டிங் செய்யாத ரோகித் சர்மா அதிரடியாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இந்த சூழலில் பும்ரா முதல் இன்னிங்சில் 10 ஓவர் மட்டுமே வீசினார். அதன் பிறகு அவர் போட்டியில் பெரும் பகுதியில் பங்கேற்கவில்லை.

- Advertisement -

முதலில் பும்ராவுக்கு உடல் சோர்வு காரணமாக ஓய்வில் இருக்கிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அது குறித்து பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க சென்று இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இதனை அடுத்து பும்ரா பதிலாக விராட் கோலி இந்திய அணி கேப்டனாக செயல்பட்டார். பும்ரா விலகிய நிலையிலும் இந்திய அணி பவுலர்கள் அபாரமாக செயல்பட்டனர். இந்த தொடர் முழுவதும் தனி ஆளாக பும்ரா தான் பந்துவீச்சு சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆனால் இன்று பும்ரா இல்லாத நிலையில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர். மேலும் இந்திய அணியின் பீல்டர்களும் அபாரமாக கேட்ச் பிடித்து பவுலர்களுக்கு உறுதுணையாக நின்றனர்.கடந்த டெஸ்ட் போட்டியில் மூன்று கேட்ச்களுக்கு மேல் விட்ட ஜெய்ஸ்வால், இன்று பாய்ந்து பாய்ந்து கேட்ச் பிடித்தார்.

- Advertisement -

இதேபோன்று கே எல் ராகுல் அபாரமான ஒரு கேட்சை பிடித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 181 ரன்களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி நான்கு ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. தற்போது பும்ரா இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறதால் பும்ரா இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles