146 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் நடக்காத சாதனையை செய்துள்ள இந்தியர்கள்.. தென்னாபிரிக்காவை சுருட்டி இந்தியா அபார வெற்றி.. !

இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு மத்தியில் நடக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டில் இன்னிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் அபார வெற்றிப் பெற்று சரியான பழிக்கு பழியை நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

கேப்டவுன் மைதானத்தில் நேற்று துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்தனர். இந்திய வீரர் சிராஜ் துவக்கம் முதலே விக்கெட்டுகளை அள்ளினார். ஒரே ஸ்பெல்லில் 6 விக்கெட்டுகளை எடுத்து தென்னாபிரிக்கா அணியை 55 ரன்களுக்குச் சுருட்ட முக்கிய புள்ளியாக விளங்கினார்.

- Advertisement -

இது தான் தென்னாபிரிக்கா அணி அவர்களது சொந்த மைதானத்தில் அடித்த குறைந்த ஸ்கோர். தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோஹித் 39, கில் 36, கோலி 46 ரன்கள் தவிர மற்ற அனைவரும் சொற்ப இலக்கில் வெளியேறினர். 153 – 4 என்ற நிலையில் இருந்த இந்திய அணி அடுத்தப் 11 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

இந்திய அணியின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் என ஏழு வீரர்கள் 0 ரன் சேர்த்தனர். இதில் 6 நபர்கள் டக் அவுட். 146 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த மோசமான சாதனையை முதல் முறையாக நிகழ்த்திய அணி இந்தியா தான்.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாபிரிக்கா. அவர்கள் துவக்க வீரர் மார்க்ரம் மட்டுமே போராடி அதிரடியான சதம் விளாசினார். இந்திய பந்து வீச்சாளர்களில் இம்முறை பும்ரா சிறப்பாக செயல்பட்டு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 79 ரன்கள் இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

12 ஓவரில் 3 விக்கெட் இழந்த நிலையில் சுலபமாக வென்றது இந்தியா அணி. இதன் மூலம் 146 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு சாதனையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி அனைத்து இன்னிங்ஸ் சேர்த்தே 107 ஓவர்கள் தான் நடந்துள்ளது. இதுவரை தந்த டெஸ்ட் போட்டியிலேயே இது தான் விரைவில் முடிக்கப்பட்ட போட்டி ஆகும்.

இது தவிர, கேப்டவுனில் வெற்றிக் கண்ட முதல் ஆசியக் கேப்டன் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா சம்பாதுதுள்ளார். சேனா மைதானத்தில் இதுவே அவரது முதல் வெற்றியும் கூட. அடுத்ததாக இந்தியாவில் இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles