கொஞ்சம் எமோஷனலா தான் இருந்துச்சு.. பந்த கைல எடுத்ததும் எல்லாம் மாறிட்டு.. என் கோச் சொன்னத செஞ்சேன்.. ஆட்டநாயகன் சிராஜ் உற்சாக பேட்டி

2025 ஆம் வருடத்தின் ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற ஆர்சிபி அணி நேற்று தங்களது ஹோம் கிரவுண்டான சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடியதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூர் மைதானம் பொதுவாக பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆர்சிபி அணி 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணியினர், பெங்களூர் அணியை 169 ரன்களில் கட்டுப்படுத்தினர். இந்தப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணியின் விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.

- Advertisement -

மேலும் இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சால்ட் 14 ரன்னிலும் அந்த அணியின் கேப்டன் பட்டிதர் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தது பெங்களூர் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும் அந்த அணியின் ஆல்ரவுண்டர் லிவிங்ஸ்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் இறுதி ஓவர்களில் களமிறங்கிய டிம் டேவிட் 18 பந்துகளில் 32 ரன்கள் எடுத்ததால் ஆர்சிபி அணி 169 ரன்கள் குவித்தது.

- Advertisement -

குஜராத் அணியின் பந்துவீச்சில் முன்னாள் ஆர்சிபி வீரரான முகம்மது சிராஜ் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் குஜராத் அணிக்காக ஆடிவரும் தமிழக வீரர் சாய் கிஷோர் 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி 17.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு 2 விக்கெட் மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் துவக்க வீரர் சாய் சுதர்சன் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும்1 சிக்ஸருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மேலும் குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடிய ஜாஸ் பட்லர் 39 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுன்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவருக்கு துணையாக விளையாடிய ரதர்ஃபோர்ட் 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டிக்கு பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேசிய அவர் இந்தப் போட்டி தனக்கு மிகவும் உணர்வு பூர்வமாக இருந்ததாக குறிப்பிட்டார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய சிராஜ், 7 வருடங்களாக இந்த மைதானம் எனக்கு சொந்த மைதானமாக இருந்தது. முதல்முறையாக சிவப்பு நிற ஜெர்சியில் விளையாடாமல் நீல நிற ஜெர்சியில் விளையாடியது எமோஷனலாக இருந்தது. எனினும் சிறிது நேரத்திலேயே இயல்பு நிலைக்குத் திரும்பினேன். எனது அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் கூறினார். பந்தை கையில் எடுத்ததும் எனது அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று உணர்வு தனக்கு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தப் போட்டி குறித்து தொடர்ந்து பேசிய அவர், கிரிக்கெட் விளையாடாத நேரங்களில் என்னுடைய தவறுகளை திருத்திக் கொள்வதற்கும் என்னுடைய உடல் தகுதியை மேம்படுத்தவும் பயன்படுத்திக் கொண்டதாக கூறினார். மேலும் குஜராத் அணிக்காக தேர்வு செய்யப்பட்டபோது ஆசிஷ் நெஹ்ராவுடன் பேசியதாக தெரிவித்தார். அப்போது அவர் தன்னுடைய பந்துவீச்சை ரசித்து விளையாடுமாறு அறிவுரை கூறியதாக பேசி இருக்கிறார் சிராஜ். மேலும் இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா என்ன மாதிரியான லென்த் மற்றும் லைனில் பந்து வீச வேண்டும் என தனக்கு அறிவுரை கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இவை போட்டியின் போது தனக்கு மிகவும் உதவியாக இருந்ததாக ஆட்டநாயகன் சிராஜ் உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles