2027 உலகக்கோப்பையில் ஆடுவீர்களா? 2 ஆண்டுகளில் முடிவு எடுப்பேன்.. ஓய்வு குறித்து ரோகித் சர்மாவின் அப்டேட்.. ட்விஸ்ட் வைத்த ஹிட்மேன்

ஐசிசி சாம்பியன்ஸ் தொடரை இந்திய அணி வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கு பின் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வந்தது.

- Advertisement -

ஆனால் ரோஹித் சர்மா தரப்பில், ஓய்வு பெறும் எண்ணமே கிடையாது. இதுவரை என்ன நடந்ததோ, அது அப்படியே தொடரும். ஓய்வு அறிவிப்புக்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார். இதனால் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் ரோஹித் சர்மா வருவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. ஏனென்றால் அதற்கான ஃபிட்னஸ் மற்றும் வயது ரோஹித் சர்மாவிடம் இல்லை.

- Advertisement -

ரோஹித் சர்மா ஓய்வு?

- Advertisement -

38 வயதாகும் ரோஹித் சர்மா, இனியும் அதே ஃபார்முடன் இருப்பாரா என்பது சந்தேகம். இதனால் 2027 உலகக்கோப்பையை மனதில் வைத்து ஓய்வை அறிவிக்காமல் இருக்காரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ரோஹித் சர்மா மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், எப்போது ஓய்வு என்று எல்லோரும் கேட்பார்கள் என்பதால் விளக்கம் அளிக்கிறேன்.

ஓய்வு பெறுவது குறித்து இப்போது சிந்திப்பது சரியானதல்ல என்று நினைக்கிறேன். இந்த தருணத்தில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதும், சரியான மனநிலையில் இருப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறேன். 2027 உலகக்கோப்பையில் குறித்து எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. நான் விளையாடுவேனா மாட்டேனா என்பதும் தெரியாது. அதுகுறித்து பேசுவதும் தேவையில்லாத ஒன்றாகும்.

- Advertisement -

முடிவு எப்போது?

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எப்போதும் ஒவ்வொரு அடியாகவே எடுத்து வைத்து வருகிறேன். அதனால் மிக தொல்லையில் எடுக்க வேண்டிய முடிவு குறித்து கவலையில்லை. தற்போது கிரிக்கெட் ஆடி வருவதை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன். என்னுடைய அணியினரும் என் இருப்பை சந்தோஷமாக நினைக்கிறார்கள் என்று கருதுகிறேன். அதுதான் எனக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துவிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துடன் ரோஹித் சர்மாவின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. கேப்டன்சி மற்றும் தொடக்க வீரர் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டார். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடுவாரா என்பது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles