‘ஈ சாலா கப் நம்தே’.. வரலாறு படைத்த பெங்களூர் அணி.. என்னால் நம்பவே முடியவில்லை.. கேப்டன் மந்தனா பெருமிதம்

மகளிர் பிரீமியர் லீக் டெல்லி அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், பெங்களூர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டி சென்றது. டி20 லகில் பதினாறு வருடங்களாக பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணி முயன்றும் வெல்ல முடியாத கோப்பையை பெண்கள் அணி வென்று சாதித்துக் காட்டி இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடர் முழுவதிலும் சற்று ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த பெங்களூர் அணி, மூன்றாவது அணியாக நாக் அவுட சுற்றுக்கு தகுதி பெற்றது. மும்பை அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி நடப்பு சாம்பியனை வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் நுழைந்தது.

- Advertisement -

இதில் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய டெல்லி அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எனவே டெல்லி பெங்களூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. பவர் பிளே வரை ஓவருக்கு 10 ரன்கள் என அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த டெல்லி அணிக்கு, அதன் பிறகு வந்த சுழற் பந்துவீச்சாளர்கள் டெல்லி அணியினை 18.3 ஓவர்களில் முடித்தனர்.

- Advertisement -

சுழற் பந்துவீச்சாளர் ஸ்ரேயன்கா பாட்டில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 114 ரன்கள் குவித்தால் சாம்பியன் ஆகலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி, எந்த விதத்திலும் அவசரப்படாமல் மிகவும் நிதானமாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் மந்தனா 31 ரன்களும், டிவைன் 32 ரன்களும், இந்த சீசனின் நட்சத்திர ஆட்டக்காரர் எல்லிஸ் பெர்ரி 35 ரன்கள் குறித்து பெங்களூர் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதனால் 16 ஆண்டு கால ஏக்கத்திற்கு நேற்று இரவு முடிவு கிடைத்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆண்கள் அணியை பொறுத்த வரை நாட் அவுட் சுற்றில் தோல்வி அல்லது இறுதிப் போட்டியில் தோல்வி என்ற நிலை தான் இதுவரை நீடித்தது. இதனால் சமூக வலைதளங்களில் ‘ஈசாலா கப் நம்தே’ என மற்ற அணி ரசிகர்கள் பெங்களூர் அணி ரசிகர்களை கேலி செய்து வந்தனர். இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது பெண்கள் அணி சாதித்துக் காட்டி இருக்கிறது. இது குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் மந்தனா கூறுகையில்

- Advertisement -

“என்னால் நம்பவே முடியவில்லை. ஒன்றை மட்டும் உறுதியாக என்னால் சொல்ல முடியும். நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த சீசனில் பெங்களூரில் எங்களுக்கு ஆட்டங்கள் சிறப்பாக அமைந்தது. ஆனால் டெல்லி அணிக்கு எதிராக இரண்டு போட்டியில் தோற்றோம். இந்த முறை சரியாக மீள வேண்டும் என்று நினைத்தோம். அது தற்போது நடைபெற்று இருக்கிறது.

கடந்த ஆண்டு தோல்வி எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. மேலும் பெங்களூர் அணி நிர்வாகம், ‘இது உங்கள் அணியின் நீங்களே உருவாக்குங்கள்’ என்று கூறியது. அணி நிர்வாகத்திற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விசுவாசம் மிக்க ரசிகர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் ‘ஈஸாலா கப் நம்தே’ என்று கூறுவோம். இந்த முறை உரக்க சொல்லுங்கள் ‘ஈசலா கப் நம்தே’என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles