ஒயிட் பால் கிரிக்கெட்டில் இந்தியா வேற மாதிரி.. சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு தகுதியானவர்கள்.. சர்வதேச கிரிக்கெட்டர்களின் பார்வை என்ன?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிச் சுற்றில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் காரணமாக இந்திய அணி 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் செய்த குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்து புதிய சாதனையை படைத்தது

- Advertisement -

சோயப் அக்தர் பாராட்டு

- Advertisement -

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளதையடுத்து, சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் மாலிக், சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். 

இந்த தொடரில் கன்சிஸ்டன்சியுடன் விளையாடி வெற்றிக்கு தகுதியானவர்கள் என்று பாராட்டி இருக்கிறார். தொடர்ந்து, பாகிஸ்தான் ஜாம்பவான் சோயப் அக்தர் தனது ட்விட்டர்பக்கத்தில், சாம்பியன்ஸ் டிராபியை சிறந்த அணி கைப்பற்றியுள்ளது. அதுவும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வென்றுள்ளார்கள் என்று பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்தின் மைக்கில் வாகன் கருத்து

பின் இலங்கை முன்னாள் வீரர் திமுத் கருணரத்னே, 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது. நம்பிக்கை, திறமை மற்றும் பிடிவாதம் மூலம் வெற்றி வசமாகியுள்ளது. சர்வதேச அரங்கில் மீண்டும் இந்திய அணி ஜொலித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றூ தெரிவித்துள்ளார். பின்னர், மைக்கில் வாகன், ஒயிட் பால் கிரிக்கெட்டில் இந்திய அணி உலகின் தலைசிறந்த அணி என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். 

அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். ஏற்கனவே டி20 உலகக்கோப்பை, இப்போது சாம்பியன்ஸ் டிராபி.. இனி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மட்டுமே மீதமுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.  பின், ஆர்சிபி முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், இந்திய அணி வெற்றிக்கு தகுதியானது. இந்திய ஸ்பின்னர்கள் அபாரமாக ஆடினார்கள். நியூசிலாந்து அணியை சராசரிக்கு குறைவான ஸ்கோரில் கட்டுப்படுத்தினர். நியூசிலாந்து அணி கடுமையான போராடியும், சிறந்த அணியால் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles