ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற என்ன நடக்க வேண்டும்?.. எவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது?.. முழு தகவல்கள் இதோ!

நேற்று ஆப்கானிஸ்தான் அணி மும்பை மைதானத்தில் எதிர்பாராத ஒரு தோல்வியை ஆஸ்திரேலிய அணியிடம் அடைந்தது. குறிப்பாக மேக்ஸ்வெல் இடம் அடைந்தது!

- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் எடுத்தது. இந்தக் கட்டத்தில் பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் ஏழு விக்கெட்டுகளை 91 ரன்களுக்கு பறித்தது.

- Advertisement -

மேற்கொண்டு 50 ரன்கள் ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் செய்யும் நல்ல வாய்ப்பு ஆப்கானிஸ்தான் அணிக்கு இருந்தது. மேக்ஸ்வெல் கொடுத்த எளிய கேட்சை முஜீப் அந்த நேரத்தில் தவறவிட்டார்.

- Advertisement -

இந்த இடத்தில் இருந்து மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாட முடிவு செய்து ஆரம்பித்தார். அதற்கு மேல் அவரை தடுக்கவே முடியவில்லை. இறுதியாக சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்த பொழுதுதான் மேக்ஸ்வெல் அடியை நிறுத்தினார்.

நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வென்று இருந்தால் 8 போட்டிகள் விளையாடி 5 போட்டிகளை வென்று 10 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்க முடியும். அரையிறுதி வாய்ப்பும் மிக அதிகமாக மாறி இருக்கும். தோல்வியின் காரணமாக மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டி இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது 8 போட்டிகளில் தலா 4 வெற்றிகள் பெற்ற அணிகளாக நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மூன்று அணிகள் இருக்கிறது.இதே வரிசையில் இந்த மூன்று அணிகளும் ரன் ரேட் அடிப்படையில் முன்னணியில் இருக்கின்றன.

நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிராகவும், பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் கடைசி போட்டியில் விளையாட இருக்கின்றன.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களுடைய கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற தென் ஆப்பிரிக்க அணியை பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

அதே சமயத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களது கடைசி ஆட்டங்களில் தோல்வி அடைந்தால், ஆப்கானிஸ்தான் அணி தன்னுடைய கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினாலே அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட முடியும். தற்பொழுது அரையிறுதியின் நான்காவது அணிக்கான போட்டி இவ்வாறாகத்தான் அமைந்திருக்கிறது!

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles