எழுதி வச்சுக்கோங்க; 2023 உலக கோப்பையில் இவர்தான் அதிக ரன்கள் எடுப்பார் – ஜாக் காலிஸ் கணிப்பு!

ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடிவத்திற்கான உலகக்கோப்பை தொடர் 1975 ஆம் ஆண்டு ஆரம்பித்து, நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இறுதியாக 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வைத்து நடத்தப்பட்டது. இத்தோடு சேர்த்து மொத்தம் 12 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்கள் இதுவரையில் நடத்தப்பட்டு இருக்கின்றன.

- Advertisement -

இதுவரை நடத்தப்பட்ட 12 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர்களில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் தலா இரண்டு முறையும், பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து தலா ஒரு முறையும் கைப்பற்றி இருக்கின்றன.

- Advertisement -

இந்த முறை 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடத்தப்பட இருக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இதுவரை இந்தியாவில் 1996 மற்றும் 2011 ஆம் ஆண்டு என இரண்டு முறை நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் மற்ற ஆசிய நாடுகளுடன் பகிர்ந்துதான் நடத்தப்பட்டது. இந்த முறை மொத்தமாக இந்தியாவில் வைத்து நடத்தப்படுகிறது.

நடக்க இருக்கும் உலகக் கோப்பை குறித்து ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் இருப்பது போலவே, கிரிக்கெட் முன்னாள் வீரர்களுக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள், கோப்பையை வெல்ல அதிகபட்சம் வாய்ப்பு இருக்கும் அணி, தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரர் என்று பல கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

இந்த வகையில் இந்த முறை நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் யார் அதிக ரன்கள் எடுப்பார்கள்? என்கின்ற தனது கணிப்பை, கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஜாக் காலிஸ் “நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலக சாம்பியன் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர்தான் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிக்க கூடிய வீரராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். இங்கிலாந்துடன் சேர்ந்து நானும் ஒரு நல்ல உலகக்கோப்பையை எதிர்பார்க்கிறேன். ஜோஸ் பட்லர் இந்த உலகக்கோப்பை தொடரில் தனித்த ஒரு வீரராக வருவார் என்று நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

இதுவரை நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் :

1975 க்ளென் டர்னர் நியூசிலாந்து
1979 கோர்டன் கிரீனிட்ஜ் வெஸ்ட் இண்டீஸ்
1983 டேவிட் கோவர் இங்கிலாந்து
1987 கிரஹாம் கூச் இங்கிலாந்து
1992 மார்ட்டின் குரோவ் நியூசிலாந்து
1996 சச்சின் டெண்டுல்கர் இந்தியா
1999 ராகுல் டிராவிட் இந்தியா
2003 சச்சின் டெண்டுல்கர் இந்தியா
2007 திலகரத்ன டில்ஷான் இலங்கை
2011 சச்சின் டெண்டுல்கர் இந்தியா
2015 மார்ட்டின் குப்டில் நியூசிலாந்து
2019 ரோஹித் சர்மா இந்தியா

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles