நாங்க இளம் படைதான்.. ஆனா இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல.. தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா பேச்சு

மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான நேற்று நடைபெற்ற போட்டியில் ரசிகர்களுக்கு வான வேடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இரு அணிகளும் ரன் மழையை பொழிந்தனர். இதில் துரதிர்ஷ்டவசமாக மும்பை இந்தியன்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு நல்ல சாதகமாக இருந்தது. இதன்படி இன்னிங்சைத் தொடங்கிய ஹைதராபாத் அணி மும்பை அணியின் பந்துவீச்சினை அடித்து நொறுக்கியதோடு முதல் விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் மயங்க் அகர்வால் கூட்டணி நான்கு ஓர்களில் 45 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்குப் பின்னர் இளம் வீர அபிஷேக்சர்மா களம் இறங்க, இந்த இருவர் கூட்டணி மிக அதிரடியாக விளையாடி 7.5 ஓவர்களில் 113 ரன்களுக்கு தனது இரண்டாவது விக்கெட்டை பறி கொடுத்தது சிறப்பாக விளையாடிய ட்ராஃவிஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பின்னர் அபிஷேக் சர்மா உடன் ஜோடி சேர்ந்த மார்க்ரம் தனது பங்குக்கு 42 ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 63 ரன்களில் வெளியேற இறுதி கட்டத்தில் அபாரமாக செயல்பட்ட கிளாசன் 34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதில் நான்கு பவுண்டரிகளும், ஏழு சிக்ஸர்களும் அடங்கும். இதனால் 20 ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 277 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். பின்னர் இலக்கை நோக்கி பயணித்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இலக்கை நோக்கி அற்புதமாக நெருங்கி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி கட்டத்தில் ஹைதராபாத் அணி பந்து வீச்சாளர்கள் ரன் வேகத்தினை கட்டுப்படுத்தினர்.

இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 64 ரன்களும், டிம் டேவிட் 42 ரன்களும், இஷான் கிசான் 34 ரன்களும் குவித்தனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில் 24 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். எனவே தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில்
“ஆடுகளம் பேட்டிங்க்கு நன்றாக ஒத்துழைத்தது. ஆனால் சன்ரைசர்ஸ் அணி 227 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஹைதராபாத் அணி மிக வலுவான பேட்டிங் வரிசை கொண்டு இருக்கிறது. ஒரு எதிரணி இவ்வளவு ஸ்கோர் செய்கிறது என்றால் அதற்கு நன்றாக பேட்டிங் செய்திருக்க வேண்டும்.

- Advertisement -

அருமையாக பேட்டிங் செய்தார்கள் மேலும் அவர்களின் பந்து வீச்சும் நன்றாக இருந்தது. இரு அணிகளும் சேர்த்து 500 ரன்கள் குவித்திருக்கிறோம் என்றால் இந்த ஆடுகளம் பேட்டிங்க்கு மிகவும் சாதகமாக இருந்தது. எங்களிடம் உள்ளது இளம் பந்துவீச்சு தாக்குதல். எனவே நாங்கள் இதன் மூலம் கற்றுக் கொள்கிறோம். பந்து ஒவ்வொரு முறையும் கூட்டத்தில் விழுவதால் உங்களுக்கு ஓவர்களை முடிக்க நேரம் தேவைப்படும்.

தென் ஆப்பிரிக்கா வீரர் மபாக்கா தனது முதல் ஆட்டத்தில் விளையாடுகிறார். இளம் வீரர் என்பதால் அடுத்தடுத்து போட்டிகள் அவருக்கு நல்ல அனுபவத்தினை பெற்று தரும். எங்கள் குறையை சரி செய்து விட்டு அடுத்த போட்டியில் வலுவாக வருவோம்” என்று கூறினார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles