ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விரைவாக நடைபெற உள்ள நிலையில் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாட உள்ளன.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தங்கள் அணியின் திட்டம் குறித்து சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்ற நிலையில் அவர் மீது ரசிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களை வைத்தனர். அவை அனைத்தையும் பொறுமையாக கடந்த ஹர்திக் பாண்டியா கடந்த டி20 உலக கோப்பையில் தனது சிறப்பான செயல்பாட்டின் மூலமாக அத்தனை விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் தக்க வைப்பு வீரர்களின் பட்டியலில் ஐந்து வீரர்களில் ஒருவராக இருந்து கேப்டனாக இந்த ஆண்டும் அணியை வழிநடத்த உள்ளார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மும்பை அணி மிகவும் வலுவாக இருக்கிறது. குறிப்பாக பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மும்பை அணியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா இந்த ஐபிஎல் தொடரில் தனது திட்டம் குறித்த சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா கூறும் போது “எனக்கு எந்த திட்டமும் பெரிதாக கிடையாது. ஸ்கோர் போர்டை கணக்கில் வைத்து அதற்கு தேவையான முறையில் நான் விளையாட கூடியவன். நான் ரண்களை துரத்திக் கொண்டிருக்கும்போது சிங்கிள் வேண்டுமா அல்லது சிக்ஸர் வேண்டுமா என்கிற ரீதியில் விளையாடுபவன். 24 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தால் 6 பந்தில் 6 சிக்ஸர்கள் அடித்து 36 ரன்கள் கொண்டு வருவதற்கு திட்டமிடுவேன். மேலும் ஒரு பத்து பந்துகளில் சிங்கிள் எடுப்பதன் மூலமாக 50 ரன்கள் எடுத்து வெற்றி பெறுவேன்.
இதையும் படிங்க:ஒவ்வொரு பந்தும் யோசிக்க வைப்பாரு.. நான் எதிர்கொண்டதில் மிகவும் கடினமான பவுலர் இவர்தான் – விராட் கோலி ஆச்சரியம்
தற்போது டி20 கிரிக்கெட் அதிக ரன்கள் எடுக்கும் விளையாட்டாக இருக்கிறது. அணிக்கு அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் தேவையாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு பார்க்கும்போது எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த நல்ல பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். எனவே இதன் மூலமாக நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார். மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

