தோல்வி குறித்து என்னால் இப்போது எதுவும் கூற முடியாது.. கடினமான நாட்கள்தான் நம்மை சிறந்தவர்களாக மாற்றும்.. தோல்வி குறித்து கூறும் ஹர்திக் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை தோற்கடித்துள்ளது.

- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 12 ஆண்டுகளாக மும்பை மைதானத்தில் கொல்கத்தா அணி வெல்ல முடியாத சோகத்தை இப்போட்டியின் மூலம் நிறைவேற்றியுள்ளது. தோல்விக்கான காரணம் குறித்து ஹர்திக் பாண்டியா முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணி 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, இம்பேக்ட் ப்ளேயராக மணீஷ் பாண்டேவை உள்ளே கொண்டு வந்தனர். மனிஷ் பாண்டே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் பொறுப்பாக விளையாடி கொல்கத்தா அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி 62 பந்துகளில் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் உருவாக்க கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

மும்பை அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதற்குப் பிறகு இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் யாதவ் தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை. சூரிய குமார் யாதவ் 35 பந்துகளில் 56 ரன்கள் குவித்த நிலையில் அவரும் ஆட்டம் இழந்து வெளியேற, மும்பை இந்தியன்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியடைந்தது.

இந்த தோல்விக்கான காரணம் குறித்து ஹார்டிக் பாண்டியா கூறும் பொழுது
“வெளிப்படையாக சொல்வது என்றால் எங்களால் பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை. விரைவாக விக்கெட்டுகளை இழந்ததே எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. நீங்கள் டி20 கிரிக்கெட்டில் பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்கவில்லை என்றால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்.

- Advertisement -

தற்போது தோல்வி குறித்து நிறைய கேள்வி வரும். அதிக நேரம் எடுப்பதால் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். முதல் இன்னிங்ஸ்ன் முடிவில் ஆடுகளம் பேட்டிங்க்கு சிறப்பாக செயல்பட்டது. நீங்கள் போர்க்களத்தை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து போராட வேண்டும் என்பதே என் அணி வீரர்களுக்கு நான் சொல்வது.

இதையும் படிங்க:பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி.. 12 வருட சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கொல்கத்தா.. கம்பேக் கொடுத்த ஸ்டார்க்

உங்களுக்கு இங்கு கடினமான நாட்களும் வரும் அதேபோல சிறந்த நாட்களும் வரும். கடினமான நாட்கள்தான் உங்களை சிறந்தவர்களாக உருவாக்கும்” என்று கூறி இருக்கிறார். இந்த போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles