“ஹர்திக் பாண்டியா தனியா கேப்டன்ஷி பண்ண முடியாது.. இவரோட சேர்ந்தாதான் சரி வரும்” – இந்திய முன்னாள் வீரர் அதிரடி!

தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரை வெளியில் வைத்து, ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட ஒரு புதிய அணியை உருவாக்கி வருகிறது!

- Advertisement -

கடந்த ஆண்டு காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடருக்கு புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டது மட்டுமல்லாமல் கேப்டன் ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் முதல் சீசனிலேயே அந்த அணி கோப்பையை வென்று அசத்தியது. இரண்டாவது சீசனில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் மெகா ஏலத்தில் மிகவும் மோசமான முறையில் செயல்பட்ட ஏலக்குழுவாக குஜராத் டைட்டன்ஸ் அணிதான் இருந்ததாக பலரால் கூறப்பட்டது. அந்த ஏலக்குழுவில் முன்னணியில் இருந்தவர், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளரான ஆசிஸ் நெக்ரா!

- Advertisement -

நிலைமை இப்படி இருக்க களத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எல்லோரையும் அசத்தியது. ஹர்திக் பாண்டியா கேப்டன்சி எல்லோராலும் கவனிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவரது கேப்டன்சி மிக மிக சுமாராகவே இருந்தது.

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” ஹர்திக் பாண்டியா 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கேப்டனாக கூட இருக்கலாம். தற்போது அவர் ஒரு வேலையில் இருப்பதாக தெரிகிறது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வழிநடத்தி ஒரு முறை சாம்பியன் ஆகவும் ஒரு முறை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச் சென்று இருக்கிறார்.

- Advertisement -

அவர் ஐபிஎல் தொடரில் இரண்டு சீசன்களுக்கு மட்டுமே கேப்டனாக இருந்தார். இரண்டிலுமே சிறந்த கேப்டனாக இருந்தார். அவர் குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த பொழுது ஒரு தெளிவான முறை இருந்தது. அது கிட்டத்தட்ட நாம் யூகிக்கக்கூடிய ஒன்றுதான். அவரது கேப்டன்சி சிறப்பாக இருந்ததற்கு காரணம், அவருடன் குஜராத் அணியின் பயிற்சியாளர் நெக்ரா இருந்ததும்தான்.

தற்பொழுது அவர் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் பொழுது கேப்டன் பொறுப்பில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன. நிலையான டெம்ப்ளேட் மட்டும் பேட்டர்ன் இல்லை. இது எதிரணியை ஆச்சரியப்படுத்தி உங்கள் அணிக்கு பயன் அளித்தால் பரவாயில்லை. ஆனால் உங்கள் அணியை பாதிப்படைய வைத்தால் என்ன செய்வது?

சாகல் பவர் பிளேவில் பந்து வீசும் பொழுது மிகவும் சாதாரண பந்துவீச்சாளராக மாறுகிறார். அக்சர் படேல் பேட்ஸ்மேன் இல்லை பந்துவீச்சாளரா என்பது உங்களுக்கே தெரியாது. நீங்கள் சில சமயம் புதிய பந்தில் வருகிறிர்கள். சில சமயம் வருவது கிடையாது. இது இன்னும் குழப்பத்தை அதிகமாக்குகிறது!” என்று கூறியிருக்கிறார்!

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles