கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறிதும் கூட அழுத்தம் தராமல் வெற்றியை எளிதாக விட்டுக் கொடுத்து விட்டனர். இந்த நிலையில் பெங்களூர் அணியின் பந்துவீச்சு நிலைமை குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.
நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் விராட் கோலி மற்றும் சில வீரர்களின் சிறிய பங்களிப்பினால் 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. பவர் பிளேவில் அதிரடியாக தொடங்கிய பெங்களூர் அணி நேரம் செல்ல செல்ல ஆடுகளமும் பந்துவீச்சு சாதகமாக மாறியதால், விராட் கோலி விளையாடியும் இறுதிக்கட்டத்தில் அந்த அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை.
இதனால் பேட்டிங்க்கு சாதகமான பெங்களூர் மைதானத்தில் ஓரளவு குறைவான ஸ்கோரை பதிவு செய்திருந்தது. இருப்பினும் பந்துவீச்சில் அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொல்கத்தா அணி பந்து வீச்சாளர்கள் ஸ்லோயர்கள், கட்டர்கள் என்று பந்துவீச்சு வேரியேஷன் காட்டிய நிலையில் பெங்களூர் பந்துவீச்சாளர்களிடம் அதை சுத்தமாக எதிர்பார்க்க முடியவில்லை.
11 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அல்சாரி ஜோசப் இந்த போட்டியில் இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் வாரி வழங்கினார். கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் வீசிய முறையை பின்பற்றி இருந்தால் கூட சற்று நெருக்கடி கொடுத்திருக்கலாம். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான சிராஜ் 3 ஓவர்களில் 46 ரன்கள் வழங்கியிருக்கிறார். இதனால் கொல்கத்தா அணி 17 ஓவர்களிலேயே வெற்றி இலக்கினை அடைந்து 19 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது.
எனவே பெங்களூரு அணியின் இந்த மோசமான செயல்பாடு குறித்து ஆர்சிபி அணியின் பந்துவீச்சு கவலை அளித்திருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் சென்னை அணியில் வீரர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்றும், பெங்களூர் வழியில் அந்த நிலைமை வேறாக உள்ளது என்றும் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்
“2024 ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்கு நல்ல பந்துவீச்சாளர்கள் என்பது இல்லை. சிறந்த பந்துவீச்சாளராக யுவேந்திர சஹால் இருந்தார். ஆனால் அவரை தக்க வைக்கவில்லை. வனிந்து ஹசரங்கா என்ற ஒரு சுழற் பந்துவீச்சாளர் இருந்தார்.
அவரும் விடுவிக்கப்பட்டார். ஒரு அணியில் நல்ல பந்துவீச்சாளர்கள் இல்லாமல் எப்போதும் வெற்றி பெற முடியாது. சிராஜைத் தவிர போட்டிகளை வெல்லக்கூடிய பந்துவீச்சாளர்கள் அவர்களிடம் இல்லை. தற்போது சிராஜும் பார்முக்காக போராடி வருகிறார். கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் எதற்காக கரன்சர்மாவுக்கு ஓய்வளித்தார்கள் என்று புரியவில்லை. ஆர்சிபி அணி வீரர்களை ஆதரிப்பதில்லை. தற்போது சிஎஸ்கே அணியில் வெற்றிகரமான வீரராக இருக்கும் சிவம் தூபே பெங்களூரு அணியில் விளையாடிய போது அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
இதையும் படிங்க :நாங்க ஒன்னு நினைச்சு வர்றோம்.. ஆனா அது வேற மாதிரி நடக்குது.. இந்த விஷயம் கோலிக்கே கஷ்டமா இருந்துச்சு..தோல்வி குறித்து கூறும் டூ பிளஸ்சிஸ்
உண்மையில் சிஎஸ்கேவில் வீரர்கள் நல்ல ஆதரவை பெறுகிறார்கள். ஆனால் ஆர்சிபியில் அந்த ஆதரவை வீரர்களால் பெற முடிவதில்லை. தூபேவை நம்பர் ஐந்து அல்லது ஆறாம் இடத்தில் களமிறங்க அனுப்பினால் அவர் தோல்விதான் அடைவார்” என்று கூறி இருக்கிறார்.

