தோனிக்கு அப்புறம் அவர்தான் கேப்டனா இருந்திருக்கணும்.. 15 வருஷமா துணை கேப்டனா இருந்தவரை சிஎஸ்கே ஆதரிக்காம விட்டுட்டாங்க – ஹர்பஜன் சிங் ஆதங்கம்

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய மற்றும் சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சிஎஸ்கே மற்றும் சுரேஷ் ரெய்னா குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகள் தோல்வி அடைந்து 2 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் நிலையில் இன்னும் சிஎஸ்கே அணிக்கு 6 போட்டிகள் மட்டுமே மீதம் இருக்கின்றன. இந்த ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

- Advertisement -

ஆனால் அணி வீரர்களை பார்க்கும்போது சிஎஸ்கே அடுத்த சில போட்டிகளில் வெற்றி பெற்றாலே அது பெரிய விஷயம் தான் என்கிற நிலைமையில் இருக்கிறது. அதிரடி கிரிக்கெட்டை தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு மற்ற அணிகள் சிறப்பாக செயல்பட்டு வரும் போது அதிரடியாக விளையாடவே சிஎஸ்கே வீரர்கள் யோசித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணிக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக இளம் வீரர்கள் ஆயுஸ் மாத்ரே மற்றும் ஷேக் ரஷீத் போன்ற வீரர்கள் வாய்ப்பு பெற்று தற்போது விளையாடி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சிஎஸ்கே சுரேஷ் ரெய்னாவை எப்படி ஆதரித்தது என்பது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு பெற்ற நிலையில் 15 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவரை சிஎஸ்கே ஆதரிக்காதது வருத்தம் அளிப்பதாக ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:கதற கதற.. வான்கடேவில் சிஎஸ்கே அணியை வதம் செய்த மும்பை.. ஹிட்மேன் – சூர்யா சம்பவம்

இதுகுறித்து அவர் கூறும் போது “சுரேஷ் ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆதரிக்கவே இல்லை. இதனால்தான் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு வழிவகுத்தது. அவர்தான் தற்போது சென்னை அணியின் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். அணியை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்தான் 15 ஆண்டுகள் துணை கேப்டனாக விளையாடி இருக்கிறார். அவருக்கான உரிய ஆதரவை சிஎஸ்கே நிச்சயம் வழங்கவில்லை” என்று ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles