சந்தேகமே வேணாம்.. இந்த நாலு டீம்ல ஒன்னு தான் 2025 சாம்பியன்ஸ் டிராபியை ஜெயிக்கும்.. வேணும்னா பாருங்க – ஹர்பஜன் சிங் பேட்டி

சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள், வருகின்ற பிப்ரவரி மாதம் 19 தேதி முதல் மார்ச் 9 தேதி வரையில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற ஹர்பஜன் சிங் சமீபத்தில் இந்த நான்கு அணிகள் தான் வெற்றி பெற வாய்ப்புள்ளது என கணித்துள்ளார். மேலும் ஜெய்ஸ்வால் கண்டிப்பாக அணியில் இடம்பெற வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த நான்கு அணிகள் தான்:

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் CricTracker-க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது, “ஆஸ்திரேலியா, இந்தியா,நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான்.

- Advertisement -

பாகிஸ்தானை இவ்வகை போட்டிகளில் இருந்து நீக்க முடியாது, ஏனென்றால் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவதால் அவர்களும் அரை இறுதி எட்ட வாய்ப்புள்ளது. என்னை பொறுத்தவரையில் இந்த நான்கு அணிகள் தான் அரை இறுதியில் எட்டும் என்று நான் கருதுகிறேன்,” என்றார்.

அவரை அணியில் எடுத்தால் நன்றாக இருக்கும்:

சாம்பியன்ஸ் டிராபியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலைத் தேர்ந்தெடுப்பது சரியான நடவடிக்கையா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஹர்பஜன்சிங், “அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் ஆதரித்த ஒருவராக நான் இருந்தேன், மேலும் அவர் பிளேயிங் XI-யில் சேர வேண்டும் எனவும் நினைத்தேன். ஏனெனில், அவர் இப்போது அணியில் சேர்ந்து விளையாடவில்லை என்றால் எப்போது தான் விளையாடுவார்?

- Advertisement -

பேட்டிங் வரிசையில் தொடக்கத்தில் இடது-வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது எப்போதும் சிறந்ததாகத்தான் இருக்கும், மேலும் ஜெய்ஸ்வாலே தொடக்க ஆட்டக்காரராக வைப்பது இன்னும் அணிக்கு பலன் அளிக்கும், ஏனெனில் அவர் தற்போது விளையாடும் விளையாட்டுகளில் எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாகவும், மிகச்சிறந்த முறையிலும் விளையாடி வருகிறார், எனவே அவர் XI-யில் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

ஜெய்ஷ்வால், சாம்பியன்ஸ் டிராபிக்கு முந்தைய இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles