43 வயசுல கூட எப்படி இவ்ளோ பிட்டா இருக்கீங்க.? ஹர்பஜன் சிங் கேட்ட கேள்வி.. எம்எஸ் தோனி கூறிய அட்டகாசமான பதில்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை விளையாட உள்ளன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் மகேந்திர சிங் தோனி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை தக்க வைப்பு வீரர்களின் பட்டியலில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் தோனியின் மீது கொண்டுள்ள அலாதியான அன்பினால் டோனி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மகேந்திர சிங் தோனிக்கு தற்போது 43 வயதாகி வரும் நிலையில் இன்னும் எப்படி கிரிக்கெட் விளையாடும் உடற்தகுதியோடு பிட்டாக இருக்கிறார் என ஹர்பஜன் சிங் தோனியிடம் கேட்டறிந்ததாக சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஹர்பஜன் சிங் விரிவாக கூறும்போது ” சமீபத்தில் எங்கள் நண்பரின் மகள் திருமணத்தில் மகேந்திர சிங் தோனியை சந்தித்தேன். அப்போது டோனி திடமாகவும், மிகவும் பிட் ஆன நிலையிலும் இருந்தார். அப்போது அவரைப் பார்க்கவே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அப்போது நான் அவரிடம் எப்படி இந்த வயதிலும் இவ்வளவு பிட்டாக இருக்கிறீர்கள் உங்களை பராமரிப்பது கடினமாக இல்லையா? என்று தோனியிடம் கேட்டேன்.

அதற்கு பதில் கூறிய மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டாக இருக்கிறது. அதனால் எனக்கு பிடித்த விஷயத்தை நான் சரியாக செய்ய விரும்புகிறேன். வெளியே சென்று விளையாட விரும்புகிறேன் என்று தோனி கூறினார். பசி இருக்கும் வரை எந்த கிரிக்கெட் தொடரிலும் விளையாட முடியும் என்று மகேந்திர சிங் தோனி நமக்கு காட்டி இருக்கிறார். அவர் யாரையும் விட தற்போது மிகவும் சிறப்பாக இருக்கிறார். அவர் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தற்காத்து விளையாடும் முறையை தவிர்த்து அதிரடியாக ஆடும் முறையில் இறங்கி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:இப்போ இருக்க பவுலர்களிடம் இந்தத் திறமை இல்லை.. பும்ரா அளவுக்கு இந்த ஒரு வீரர் மட்டுமே பந்து வீசுகிறார் – டேல் ஸ்டெயின் பேச்சு

கடந்த இரண்டு மாதங்களாக அவர் பயிற்சி செய்யும் முறையை பார்க்கும் போது உங்களுக்கு டைமிங் சரியாக அமைந்தால் உங்களால் பெரிய சிக்சர்களும் அடிக்க முடியும் என்பதை காட்டுகிறது. அவர் தற்போது சென்னையில் இருந்து ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு மணி நேரங்கள் வரை பயிற்சி செய்கிறார். தோனி இந்த வயதிலும் மைதானத்திற்கு முதல் ஆளாக பயிற்சி செய்ய வருகிறார் மற்றும் கடைசி ஆளாகத்தான் வெளியேறுகிறார். விக்கெட் கீப்பிங் செய்வதில் இன்றளவும் மகேந்திர சிங் தோனியே தற்போது முன்னணியில் இருக்கிறார். அவரது கைகளுக்கு பந்து சென்றால் பத்தில் ஒன்பது முறை நீங்கள் ஆட்டம் இழந்து விடுவீர்கள். ஒருபோதும் அவரது கைகள் பின்னோக்கி சென்றது கிடையாது. அதனால்தான் தோனி தற்போது மிகவும் சிறப்பாக இருக்கிறார்” என்று ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles