ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சீசனின் இரண்டாவது பாதியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுவரை 13 ஆட்டங்கள் விளையாடியுள்ள நிலையில் ஆறு போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் தழுவி தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
சென்னை அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு விராட் கோலி கேப்டனாக செயல்பட வேண்டும் என்று அதற்கான காரணத்தையும் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
பெங்களூர் இந்த சீசனில் மிக சுமாரான ஆட்டத்தை தொடக்கத்தில் வெளிப்படுத்தி வந்தது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் அடுத்த ஏழு போட்டிகளில் தோல்வியை தழுவி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போய்விடும் நிலைமையில் இருந்தது. அதற்குப் பின்னர்தான் அணியில் குறிப்பாக சில மாற்றங்களை கொண்டு வந்தது.
ஸ்பின்னர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஸ்வப்னில் சிங் அதற்குப்பின் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். மேலும் மேக்ஸ்வெல் நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வில் ஜாக்ஸ் அணியில் கொண்டுவரப்பட்டார். அதற்குப் பின்னரே ஆர்சிபி அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தது. தற்போது ஆக்ரோஷமான வெற்றிகளை குவித்து வரும் பெங்களூர் அணிக்கு அடுத்த ஆண்டு விராட் கோலியை கேப்டனாக கொண்டு வர வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன்சின் கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“பெங்களூர் அணி இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றால் அடுத்த ஆண்டு இந்திய வீரர் ஒருவரை பெங்களூர் அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும். ஏன் திரும்பவும் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க கூடாது? சென்னை அணியில் தோனி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று அனைவரும் அறிவோம். விராட் கோலி ஒரு சிறந்த கேப்டன்.
பெங்களூர் அணி என்ன மாதிரியான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதை விராட் கோலி நன்கு அறிவார். ஆர்சிபி அணியின் ஆட்டத்தின் ஆக்ரோஷம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அனைவரும் வெற்றி பெறும் கவனத்தில் கூடுதாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆக்ரோஷம் விராட் கோலி அணிக்குள் கொண்டு வந்ததுதான். எனவே திரும்பவும் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும்.
இதையும் படிங்க:வாழ்வா? சாவா? ஆட்டத்தை நிர்ணயிக்கப் போகும் நம்பர் 18.. கூறும் புள்ளி விவரங்கள்.. சிஎஸ்கேவை முந்த பெங்களூர்க்கு வாய்ப்பு
இந்த சீசனில் கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் டு பிளசிஸ் பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் நன்றாக செயல்பட்டாலும் கேப்டனாக கன்சிஸ்டன்ஸியில் சொதப்பி வருகிறார். மேலும் அவருக்கு 39 வயது ஆவதால் அடுத்த ஆண்டு பெங்களூரு அணி இவரை தக்க வைக்குமா? என்ற சந்தேகமும் நிலவுகிறது. இதனால் விராட் கோலியை திரும்பவும் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

