வாழ்வா? சாவா? ஆட்டத்தை நிர்ணயிக்கப் போகும் நம்பர் 18.. கூறும் புள்ளி விவரங்கள்.. சிஎஸ்கேவை முந்த பெங்களூர்க்கு வாய்ப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஏற்கனவே 13 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி லீக் ஆட்டம் வருகிற சனிக்கிழமை நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி ஏழு போட்டிகளில் வெற்றி, ஆறு போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பொறுத்த வரை ஒரு தோல்வி கூடுதலாக ஆறு போட்டிகளில் வெற்றியும், ஏழு போட்டிகளில் தோல்வியும் அடைந்து தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே மூன்றாவது இடத்திலும், தற்போது பெங்களூர் அணி ஐந்தாவது இடத்தில் இருக்கிற நிலையில் இந்த இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணியே நான்காவது அணியாக ப்ளே ஆப் செல்ல வாய்ப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

- Advertisement -

புள்ளி பட்டியலில் தற்போது கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இதில் சென்னை மற்றும் பெங்களூர் அணியை தவிர டெல்லி, லக்னோ ஆகிய அணிகளின் ரன் ரேட் குறைவாக இருப்பதால் இந்த அணிகளின் பிளே ஆப் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.

சென்னை மற்றும் பெங்களூர் அணியை பொறுத்த வரை சென்னை அணி வெற்றி பெற்றாலே தகுதி பெற்ற விடும். ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தால் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்த வேண்டும். மாறாக சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் குவித்தால் அந்த வெற்றி இலக்கை பெங்களூர் அணி 18 ஓவர்களில் அடைந்து வெற்றி பெற வேண்டும்.

- Advertisement -

இந்த இரண்டில் பெங்களூர் அணிக்கு ஏதாவது ஒன்று சாதகமாக நடைபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெற முடியும். மேலும் இந்த போட்டியில் வல்லுனர்களின் கணிப்பின்படி பெங்களூர் அணியின் கையே அதிகமாக ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் சென்னை அணியின் பந்துவீச்சு தற்போது பலவீனமாக உள்ளது.

இதையும் படிங்க:ஏற்கனவே பௌலிங் வீக்.. இதுல இந்த ஆல் ரவுண்டரும் அவுட்டா.. கரை ஏறுமா சிஎஸ்கே?

மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த தொடரில் 5 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்று தற்போது வலுவான நிலையில் உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து தற்போது மிக வலுவாக உள்ளது. அந்த அணியில் வில் ஜேக்ஸ் தற்போது விலகி இருந்தாலும் மேக்ஸ் வெல்லை வைத்து சமாளித்துக் கொள்ளும். எனவே இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மிக முக்கியத்துவம் பெறுவதால் இந்தப் போட்டியில் அனல் பறக்கும் என்பது உறுதி.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles