ஏற்கனவே பௌலிங் வீக்.. இதுல இந்த ஆல் ரவுண்டரும் அவுட்டா.. கரை ஏறுமா சிஎஸ்கே?

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி இதுவரை 7 போட்டிகளில் வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா அணி முதல் அணியாக தகுதி பெற்றுவிட்ட நிலையில் மீதி தேர்வாகும் மூன்று அணிகள் இனி நடைபெற இருக்கும் எஞ்சிய போட்டிகளில் வெற்றி, தோல்விகளைப் பொறுத்து அமையும். இதில் இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நான்காவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இருக்கின்றன.

- Advertisement -

இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருப்பதால் கிட்டத்தட்ட அதுவும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்றே சொல்லலாம். மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு முறையே இன்னும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அந்த வெற்றிகளை அவர்கள் பெரும் பட்சத்தில் இறுதியாக அவர்களும் பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு பெறலாம்.

- Advertisement -

ஆனால் டெல்லி, லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு பிளே ஆப் சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்புகளும் இருப்பதால் இந்தத் தொடர் தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. சென்னை அணியை பொறுத்த வரை தனது கடைசி சீசன் லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கனவே முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் விலகிய நிலையில் தற்போது இந்திய அணி பந்துவீச்சாளர்களை வைத்து ஓரளவு சமாளித்து வருகிறது.

கடந்த ராஜஸ்தான அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் சிஎஸ்கே அணி ஓரளவு நன்றாக செட் ஆகியுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியும் டி20 உலக கோப்பைக்காக தாயகம் திரும்ப உள்ளதால் தற்போது மீண்டும் புதிய சிக்கலில் மாட்டியிருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஓரளவு நல்ல பங்களிப்பை வழங்க கூடிய மொயின் அலி இல்லாதது நிச்சயம் சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

- Advertisement -

ஆனால் அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியைச் சேர்ந்த சான்ட்னர் இருப்பதால் இந்த சிக்கலில் ஓரளவு தப்பிக்கும். மேலும் இவரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்தி பேட்ஸ்மேன் ஆக ஆரவல்லி அவிநாஷை பயன்படுத்தலாம். மேலும் வலுவான அணிகளுடன் சென்னை அணி போட்டி போடும் என்பதால் இனி எஞ்சிய போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிச்சயம் சவாலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க:சிஎஸ்கேவை ஏமாற்றினாரா பத்திரானா.?.. இலங்கை கிரிக்கெட் வெளியிட்ட புது தகவல்.. ரசிகர்கள் குழப்பம்

மேலும் இந்த தொடரில் அதிக கவனம் பெற்று வரும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜாக்ஸ் விலகி உள்ளதால் அந்த அணியும் சற்று சிக்கலில் மாட்டியிருக்கிறது. இருப்பினும் ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த மேக்ஸ்வெல் அவருக்கு நிகரான மாற்று வீரராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles