சிஎஸ்கேவை ஏமாற்றினாரா பத்திரானா.?.. இலங்கை கிரிக்கெட் வெளியிட்ட புது தகவல்.. ரசிகர்கள் குழப்பம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை வேக பந்துவீச்சாளர் பத்திரானா காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நிலையில், தற்போது அவர் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிக்கை வெளி வந்ததை தொடர்ந்து சிஎஸ்கே ரசிகர்கள் தற்போது குழப்பத்தில் உள்ளனர்.

- Advertisement -

கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக கடைசி இரண்டு போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் பத்திரானா விளையாடினார். அவரது பந்துவீச்சால் பெரிதும் ஈர்க்கப்பட்ட மகேந்திர சிங் தோனி 2023ஆம் ஆண்டு அவரை சிஎஸ்கே அணிக்காக முக்கிய பௌலராக உருமாற்றினார்.

- Advertisement -

முக்கியமான கட்டத்தில் சிறப்பாக பந்துவீசி சிஎஸ்கே அனுப்பி வெற்றிகளை தேடித் தந்ததுடன் 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வெல்ல பத்திரான முக்கிய காரணமாகவும் அமைந்தார். இந்த நிலையில் சிஎஸ்கேவின் செல்லப் பிள்ளையாகவே மாறிவிட்ட பத்திரானா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் பங்கேற்றும், காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார்.

- Advertisement -

கடைசியாக தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகிய நிலையில், டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக அவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தாயகம் திரும்புமாறு அழைத்தது. இந்த நிலையில் அவரும் இலங்கை திரும்பும் முன்னர் உருக்கத்துடன் சமூக வலைதளத்தில் தோனி குறித்தும்,சிஎஸ்கே குறித்தும் முக்கிய கருத்துக்களை பதிவிட்டு தாயகம் திரும்பினார்.

காயம் காரணமாக பத்திரானா இலங்கை திரும்பிய நிலையில் தற்போது அவர் முழு உடர் தகுதியுடன் இருப்பதாகவும் வருகிற டி20 உலக கோப்பைக்கு அவர் முழு நிலையில் தயார் என்றும் தேர்வுக்குழு தலைவர் உப்புல் தரங்கா தலைமையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதைப் பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் உலகக்கோப்பை தொடர்கள் பங்கு பெறுவதற்காக பத்திரானா சென்னை அணியை ஏமாற்றினாரா? என்று சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை இறுதிக்கட்டத்தில் சிறப்பாக பந்து வீசுவார் என்ற காரணத்தினால் சென்னை அணி இவரையே அதிகமாக சார்ந்து இருந்தது. தற்போது இவரது இழப்பினால் சென்னை அணி சில தோல்விகளை சந்தித்தாலும், அதற்கு பின்னர் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து பந்துவீச்சை மீண்டும் சற்று பலப்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்படும் பத்திரானா இப்படி ஏமாற்றம் அளிக்கும் செயலை செய்யலாமா? உங்களுக்கு முழு ஆதரவை கொடுத்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு நீங்கள் காட்டும் நன்றிக்கடன் இதுதானா? என்பது போன்ற கருத்துக்களை சிஎஸ்கே ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருத்தத்தினை தெரிவித்து வருகின்றனர். டி20 உலக கோப்பைக்காக பத்திரானா அமெரிக்கா இன்று கிளம்பிவிட்டதால் இனி சென்னை அணியுடன் இணைய வாய்ப்பும் இல்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles