2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. தற்போது சில லீக் போட்டிகள் மட்டும் இருக்கும் நிலையில், பிளே ஆப் சுற்று அடுத்த வாரத்தில் இருந்து தொடங்க உள்ளது.
இந்நிலையில் முதல் அணியாக கொல்கத்தா பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதால் இனி வரும் போட்டிகளில் முடிவைப் பொறுத்து அந்த அணிகளின் பிளே ஆப் வாய்ப்பு இறுதி செய்யப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு சாம்பியன் ஆகப்போகும் அணி குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் ஹர்பஜன் சிங்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தற்போது பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இதுவரை 63 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.இதில் மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி விட்டன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பான வெற்றிகளை குவித்து தற்போது முதல் இடத்தில் இருக்கும் நிலையில், அதற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மூன்றாவது இடத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நான்காவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இருக்கின்றன.
முதல் மூன்று இடங்களில் ஏறக்குறைய இறுதியாக விட்ட நிலையில் நான்காவது அணிக்கு லக்னோ, டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை என நான்கு அணிகள் போட்டி போடுகின்றன. சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கே அதிக வாய்ப்பு இருப்பதால் இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் ஐபிஎல் சாம்பியன் கோப்பையை கைப்பற்றும் அணி குறித்து இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது
” இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றும் என கருதுகிறேன். ஏனெனில் தற்போது கொல்கத்தா அணிக்கு இந்தத் தொடரில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சமநிலையுடன் விளங்குகிறது.
மேலும் சுழற் பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என இரண்டிலும் சமநிலையாகவும் தொடக்க வரிசை, மிடில் வரிசை என அனைத்து இடங்களிலும் வலுவாகவே வழங்குகிறது. ஒரு வலுவான அணிக்கு என்ன தேவையோ அவை எல்லாம் அந்த அணியில் இருப்பதால் அவர்கள் தற்போது டேபிள் டாப்பர்களாக இருக்கிறார்கள்.
இதையும் படிங்க:முடிவுக்கு வந்த கே எல் ராகுல், சஞ்சீவ் கோயங்கா பிரச்சனை.. இரவு விருந்தில் வைத்த முற்றுப்புள்ளி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
கொல்கத்தா அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருப்பதால் அவர்களால் கோப்பையை கைப்பற்ற முடியும் என்று நம்புகிறேன். மேலும் கொல்கத்தா அணியை வீழ்த்த அந்த நாள் எதிரணிக்கு நல்ல நாளாக அமைய வேண்டும். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர்களை வெற்றி பெறுவது என்பது கடினமான காரியம். அவர்கள் சிறந்த முறையில் கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள்” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்து இருக்கிறார்.

