முடிவுக்கு வந்த கே எல் ராகுல், சஞ்சீவ் கோயங்கா பிரச்சனை.. இரவு விருந்தில் வைத்த முற்றுப்புள்ளி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் இருந்து கே எல் ராகுல் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போகிறார் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இனி வரும் போட்டிகளுக்கு லக்னோ அணிக்கு கே எல் ராகுல்தான் தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஐபிஎல் தொடர் 57-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி 165 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 10 ஓவர்களிலேயே 165 ரன்கள் இலக்கை எட்டி 167 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இப்போட்டிக்கு பின்னர் லக்னோ அணி படுதோல்வி அடைந்ததால் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மைதானத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

- Advertisement -

இதனால் கே எல் ராகுல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்றும், விரைவில் லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் லக்னோ அணி நிர்வாகமும் அடுத்த ஆண்டு நடைபெறும் மெகா சீசனில் கே எல் ராகுலை தக்க வைக்கப் போவதில்லை என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. பின் திடீரென்று சில நாட்களுக்கு முன்னதாக கே.எல் ராகுல் இனிவரும் எஞ்சிய போட்டிகளுக்கும் கேப்டனாக தொடர்வார் என்று அறிவிப்பும் வெளிவந்தது.

இந்த நிலையில் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று நடந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் கே எல் ராகுலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கலந்துகொண்டு இந்த பிரச்சனையை இருவரும் பேசி முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது இருவரும் கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனால் இனிவரும் எஞ்சிய போட்டிகளுக்கும் கே.எல் ராகுலே கேப்டனாக தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இதெல்லாம் நடக்கும்னு முன்னாடியே தெரியும்.. 5 முறை சாம்பியன்னா சும்மாவா.. பக்காவா பிளான் போட்ட சிஎஸ்கே.. பீதியில் ராஜஸ்தான், ஆர்சிபி

லக்னோ அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது. இனி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலே அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என்ற சூழ்நிலையில் இது போன்ற பிரச்சனைகள் லக்னோ அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன் காரணமாகவே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்டு தற்போது லக்னோ அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles