நம்ம புடிச்சு இருக்கும் வரை சாய் சுதர்சன் வர மாட்டார்.. அந்த அளவுக்கு கடினமாக உழைக்கும் மனிதர் – பார்த்தீவ் பட்டேல் சுவாரஸ்ய தகவல்

நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி சிறப்பாக செயல்பட்டு 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் குஜராத் அணியின் வெற்றிக்கு சிறப்பாக செயல்பட்ட தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் குறித்து அந்த அணியின் துணைப் பயிற்சியாளர் பார்த்தீவ் பட்டேல் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

குஜராத் அணியில் நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பான முறையில் விளையாடி வருகிறது. இதுவரை விளையாடி 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அணியின் கேப்டன் கில் பெரிய இன்னிங்ஸ் விளையாட வில்லை என்றாலும் அந்த அணியின் துவக்க வீரர் சாய் சுதர்சன் இதுவரை மூன்று அரை சதங்கள் அடித்து மொத்தமாக 273 ரன்கள் குவித்த நிலையில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு அடுத்த இடத்தில் ஜாஸ் பட்லர் வருவதால் அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் மிகவும் வலுவான நிலையில் இருக்கிறது. மேலும் பந்துவீச்சில் சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் போன்ற வீரர்கள் வலு சேர்ப்பதால் முழுவதும் அந்த அணி வலுவாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் குஜராத் அணி குறித்து அதன் துணை பயிற்சியாளர் பார்த்து பட்டேல் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இது குறித்து பார்த்தீவ் பட்டேல் விரிவாக கூறும்போது ” கடந்த ஒரு மாத காலமாக சாய் சுதர்சன் மிகவும் கடினமான முறையில் உழைத்து வருகிறார். எனவே அவர் இத்தகைய முடிவுகளை பெறுவதில் எனக்கு எந்த விதமான ஆச்சரியமும் இல்லை. அவர் வலைப் பயிற்சியிலிருந்து நாமாக வெளியே எடுக்கும் வரை அவர் தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருப்பார். அந்த அளவிற்கு மிகவும் கடினமாக உழைக்கும் மனிதர். மேலும் அவர் விஷயங்களை எளிதாக வைத்திருப்பதால் அவரது தேவைக்கு தகுந்தபடி அவரால் சிறப்பாக செயல்பட முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க:இந்திய அணியில் இடம் பெறுவதை விட.. என் கனவு இப்போதைக்கு இது மட்டுமே.. அதுக்குத்தான் நான் கடினமா உழைக்கிறேன் – தமிழக வீரர் சாய் சுதர்சன்

எங்கள் அணியில் முகமது சிராஜ் நன்றாக பந்து வீசி வருகிறார். பிரசித் கிருஷ்ணா இந்தத் தொடர் தொடங்கியது முதல் சிறப்பாக இருந்து வருகிறார். சாய் கிஷோர் இந்த தொடரின் சிறந்த சுழற் பந்துவீச்சாளராக இருப்பார். அவர் பந்து வீசும் விதத்தில் மிகவும் துணிச்சலான நபர். எங்கள் அணியில் ஒவ்வொரு பந்துவீச்சாளரும் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற வைக்கிறார்கள். பந்து வீச்சாளர்கள் ஒரு தொடரை வெற்றி பெறக்கூடிய அளவிற்கு வலிமையாக இருக்கிறார்கள்” என்று அவர் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles