தமிழனுக்கே உரித்தான குணம்.. நேர்மையாக வெளியேறிய சாய் சுதர்சன்.. ரசிகர்கள் பாராட்டு

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பஞ்சாப் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. இருப்பினும் இப்போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் செய்த செயலால் ரசிகர்கள் தற்போது பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் படி முதலில் பேட்டிங் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. சகா 11 ரன்களில் வெளியேற, குஜராத் அணி 29 ரன்களில் தனது முதல் விக்கெட்டைப் பறிகொடுத்தது. அதற்குப் பிறகு கேன் வில்லியம்சன் அணியின் கேப்டன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 26 ரன்கள் குவித்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக பஞ்சாப் அணி வீரர் ஹர்பிரித் பிரார் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதற்குப் பிறகு தமிழக வீரர் சாய் சுதர்சன் உடன் அணியின் கேப்டன் கில் கூட்டணி அமைத்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. முக்கியமாக சிக்கந்தர் ராசாவின் ஓவரில் கில், சாய் சுதர்சன் ஜோடி 3 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசி அசத்தியது.

- Advertisement -

இதனால் 12 ஓவர்களில் குஜராத் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 100 ரண்களைக் கடந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தது. பின் ரபாடா ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என சிறப்பாக விளையாடிய இந்த கூட்டணியில் சாய் சுதர்சன் அரைசதம் அடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ஹர்சல் பட்டேலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஹர்ஷல் பட்டேல் வீசிய ஸ்லோயர் பந்தை லெக்சைடில் அடிக்க முயற்சிக்க, அதை எதிர்பாராத விதமாக சாய் கிஷோரின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரின் கைகளில் தஞ்சம் அடைந்தது. இதை அவுட் என்று ஹர்சல் பட்டேல் மற்றும் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா நடுவரிடம் அப்பீல் செய்ய நடுவர் பந்து பேட்டில் படவில்லை என்று அவுட் தர மறுத்து விட்டார். தனது பேட்டில் பந்து பட்டதை உணர்ந்த சாய் சுதர்சன் நேர்மையாக களத்தை விட்டு வெளியேறினார்.

- Advertisement -

நடுவரின் தீர்ப்புக்காக காத்திருக்காமல் தான் அவுட் என்பதை உணர்ந்து சாய் சுதர்சன் வெளியேறியது தற்போது ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது. இது தமிழனுக்கே உரித்தான குணம் என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அதிக அளவு வைரல் ஆக்கி வருகின்றனர். இறுதியில் குஜராத்த அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க:பேட்டிங் பண்றப்போ நம்மதான் ராஜான்னு நினைச்சுக்கணும்.. அப்போ ஒரு தெம்பு வரும்.. ஆட்டநாயகன் சஷாங்க் சிங் பேட்டி

இதற்கு பின்னர் 200 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி சஷாங்க் சிங் 61 ரன்கள் அசிடோஸ் சர்மா 31 ரன்கள் அதிரடியாக குவிக்க 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. 61 ரன்கள் குவித்த சஷாங்க் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles