சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி சதம் விளாசி இருந்தார். குஜராத் அணிக்கு முக்கியமான போட்டியில் சதம் விளாசிய சாய் சுதர்சன் இன்னும் அதிக வெளிச்சம் பெறாமல் இருக்கிறார் என்று தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரீம் ஸ்மித் கூறியிருக்கிறார்.
அகமதாபாத் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் மிகவும் சிறப்பாக விளையாடி 51 பந்துகளில் 103 ரன்கள் குவித்து இருந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மான் கில் சிறப்பாக விளையாடி 104 ரன்கள் குவித்திருந்தார். அந்தப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்ற நிலையில் ஆட்டநாயகன் விருது சாய் சுதர்சனுக்கு வழங்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கில்லுக்கே வழங்கப்பட்டது. இது குஜராத் அணி ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட்டரான கிரீம் ஸ்மித் சாய் சுதர்சன் குறித்து ரொம்பவே பெருமையாக பேசி இருக்கிறார். சாய் சுதர்சன் இன்னும் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறார். எனவே அவர் குறித்து இன்னும் அதிகமாக பேசப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஸ்மித் விரிவாக கூறும்போது
“கில்லுடன் மேத்யூ வேட் களமிறங்க வேண்டும். மற்றும் சாய் சுதர்சன் மூன்றாவது வரிசையில் களமிறங்கி விளையாட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் குஜராத் அணி நிர்வாகம் அவரை தொடக்க ஆட்டக்காரராக கில் உடன் களமிறக்கியது. ஆனால் இது ஒரு அபாரமான முடிவு. இடது வலது காம்பினேஷனில் குஜராத் அணிக்கு தற்போது தொடக்கம் மிகச் சிறப்பாக செட்டாகி இருக்கிறது.
இளம் வீரர்களான இவர்கள் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடி ஓடி ரன்கள் குவித்தது பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. பீல்டர்களை நன்றாக கணித்து இடைவெளியை பார்த்து அற்புதமாக விளையாடினார்கள். சாய் சுதர்சன் அதிக வெளிச்சம் பெறாமல் இன்னும் பேசப்படாத வீரராகவே இருந்து வருகிறார். நடப்பு சீசனைப் பொறுத்தவரை குஜராத் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரரும் இவர்தான். ஐபிஎல்-ஐ பொறுத்தவரை அதிவேகமாக ஆயிரம் ரன்களை குவித்திருக்கும் வீரரும் இவர்தான்.
இதையும் படிங்க:தோனியை பார்க்க மைதானத்திற்குள் ஓடி வந்த ரசிகர்.. உடனே தோனி செய்த செயல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ
சச்சின் டெண்டுல்கரை விட சாய் சுதர்சன் ஆறு இன்னிங்ஸ் குறைவாகவே இந்த மைல் கல்லை எட்டி இருக்கிறார். சாய் சுதர்சன் இன்னும் அதிகமாக பேசப்பட வேண்டிய வீரர் ஆவார்” என்று கூறியிருக்கிறார். இந்த சீசனைப் பொறுத்தவரை பேட்டிங்கில் குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் பேட்ஸ்மேனும் இவர்தான்.

