தோனியை பார்க்க மைதானத்திற்குள் ஓடி வந்த ரசிகர்.. உடனே தோனி செய்த செயல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தாலும் சென்னை அணியின் பேட்டிங்கின் போது மைதானத்திற்குள் தோனி செய்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

மகேந்திரசிங் தோனி தற்போது ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனின் தாரக மந்திரமாக மாறி உள்ளது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் தோனி பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் களமிறங்கும் போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கும். இந்தியாவில் எந்த மைதானத்தில் விளையாடினாலும் இவரைக்காண ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் அந்த மைதானத்திற்கு படையெடுக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

- Advertisement -

அந்த அளவிற்கு மனிதன் இந்திய கிரிக்கெட்டுகாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் பல சாதனைகளை செய்து இருக்கிறார். இந்திய அணிக்காக 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையும், 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையும் பெற்றுக் கொடுத்தவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரை 5 ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்துள்ளார்.

- Advertisement -

இதையெல்லாம் தாண்டி மகேந்திர சிங் தோனிடம் கவனிக்க கூடிய ஒரு விஷயம், எந்த சூழ்நிலையிலும் அவர் தன் பொறுமையை மட்டும் கைவிடவே மாட்டார். களத்தில் ஒரு கேப்டனாக அவர் எடுக்கும் முடிவுகளும், ஒரு பேட்ஸ்மேனுக்கு அவர் அவர் எதிராக போடும் திட்டமும் அவ்வளவு துல்லியமாக இருக்கும்.

நேற்று மகேந்திர சிங் தோனி குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அகமதாபாத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது தோனியை பார்க்க மைதானத்திற்குள் ஓடிவந்த ரசிகர், தோனியை பார்த்ததும் அவர் காலில் விழுந்தார். இதைப் பார்த்த தோனி அவரை எழுப்பி கட்டி அணைத்து அறிவுரையும் கூறி வழியனுப்புவதற்குள் அங்கிருந்த மைதான அதிகாரிகள் ரசிகரை இழுக்க முயன்றனர்.

- Advertisement -

அப்போதும் மகேந்திர சிங் தோனி அவர்களிடமும் அறிவுரை கூறிவிட்டு அமைதியாக கூட்டிச் செல்லும்படி கூறியிருக்கிறார். இதன் மூலம் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டையும் தாண்டி தன் மீது அன்பு வைத்துள்ள ரசிகர்களையும் நேசிக்கிறார் என்பதே இதற்கான சான்று. மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள அன்பு என்றுமே மாறாதது.

இதையும் படிங்க:அவரைப் பார்க்கும்போது பிரம்மிப்பாகவும், எங்களைப் பார்க்கும்போது ஒரு கை உடைஞ்ச மாதிரியும் இருக்கு.. தோல்வி குறித்து ஸ்டீபன் பிளமிங் பேட்டி

தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் இணையதளங்களில் மிகவும் வைரல் ஆக்கி வருகின்றனர். தோனி விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில் இனி வரும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலையில் இருக்கிறது. சென்னை அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அதற்கு அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles