எனக்கும் கோலிக்குமான உறவு இப்படித்தான் இருக்கு.. ரோஹித் கோலி 2027 உலக கோப்பையில் விளையாடுவார்களா? – கம்பீர் பேட்டி

கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றதும், இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடருக்கு இந்திய அணியை தேர்வு செய்து இருக்கிறார்கள். அதில் ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இடம் பெற்றிருக்கும் நிலையில் தனக்கும் விராட் கோலிக்குமான உறவு குறித்து கௌதம் கம்பீர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர் அந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதற்குப் பிறகாக இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வரப்போவது யார்? என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், கௌதம் கம்பீர் அதற்கான பொறுப்பையும் ஏற்று தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் கூட்டணி டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களுக்கான இந்திய அணியை அறிவித்தது. அதில் திரும்பவும் ஒரு நாள் தொடர்களில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் திரும்பவும் சேர்க்கப்பட்டுள்ளனர். விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் ஆக்ரோஷமான வீரர்களாக இருக்கும் நிலையில், ஐபிஎல் தொடர்களில் அவர்கள் மோதிக் கொள்ளும் காட்சியை பார்த்திருக்கிறோம்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் விராட் கோலி குறித்து பேசிய கௌதம் கம்பீர் “நான் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு விராட் கோலியும், நானும் தொடர்ந்து நல்ல தகவல் தொடர்பில் இருக்கிறோம். எனக்கு விராட் கோலியின் மேல் நல்ல மதிப்பும், மரியாதையும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு உலகத்தரமான வீரர். எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு நல்ல முறையில் இருக்கிறது.

நான் ஏற்கனவே கூறியது போலத்தான் நாங்கள் எங்கள் அணிக்காக வெற்றி பெற கடுமையாக உழைப்போம். இந்திய அணியை பெருமைப்படுத்துவதே எங்களின் ஒரே நோக்கம். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு விளையாட இன்னும் நிறைய கிரிக்கெட் தொடர்கள் உள்ளது. அவர்கள் இருவருமே உலகத்தரமான வீரர்கள்.

- Advertisement -

இதையும் படிங்க:இந்தியா வரலனா கிரிக்கெட் ஒன்றும் அழிந்து போகாது.. ஆனால் இந்தியா பிளேயர்ஸ் அப்படி நினைக்கல – ஹசன் அலி பேட்டி

தற்போது எங்கள் முன்னே இருக்கும் சவால்கள் ஆஸ்திரேலியா தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகும். மேலும் இவர்கள் இருவரும் நல்ல உடல் தகுதியோடு இருந்தால் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பையிலும் இடம் பெறுவார்கள். அவர்களுக்கு எப்போதுமே உலகத்தின் எல்லா பெரிய அணிகளிலும் நிச்சயமாக இடம் இருக்கும். நாங்கள் இந்தியாவுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles