பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவித்து வரும் வேளையில், பாகிஸ்தான் அணியின் வீரர் ஹசன் அலி காட்டமான கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
மினி உலகக் கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து சர்வதேச அணிகளும் கலந்து கொள்ளும் வேளையில், இந்தியா மட்டும் விளையாடாமல் மறுப்பு தெரிவித்து வருகிறது.
ஆனால் இதற்கு முன்பாக ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டிய சூழ்நிலையில் போட்டிகள் மட்டும் பொதுவாக துபாயில் நடத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியமும் இந்தியா விளையாடும் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியா வந்து விளையாடியது.
ஆனால் இந்தியா மட்டும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் வீரரான ஹசன் அலி “பாகிஸ்தான் அணி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றது. அதனால் இந்தியாவும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும். நான் இந்தியாவில் பல வீரர்களின் பேட்டிகளை பார்த்திருக்கிறேன்.
அவர்களும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதனால் இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாட விரும்பவில்லை என்று கூற முடியாது. எனினும் இந்திய அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் குறித்துதான் இந்திய அணி இங்கு வந்து விளையாடுவது குறித்து சிந்திக்க முடியும். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் சொல்வது போல சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுகிறது என்றால் அது பாகிஸ்தானில் மட்டுமே நடைபெற வேண்டும்.
இதையும் படிங்க:தோனி இதை செஞ்சப்ப.. என் கனவே உடைஞ்சு போச்சு.. ரொம்ப வருத்தப்பட்டேன் – சிவம் தூபே பேட்டி
இந்தியா இங்கு வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்றால், இந்தியா இல்லாமையே இந்த தொடரை நடத்துவதுதான் சரியாக இருக்கும். இந்தியா வந்து பங்கேற்கவில்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் அழிந்து விடாது” என்று ஹசன் அலி கூறியிருக்கிறார். இருப்பினும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கவில்லை என்றால் அது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படும். இதனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஐசிசி தற்போது ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

