17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெறுகிற பத்தாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல்லில் எல் -கிளாசிகோ என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எவ்வாறு எதிரிகளோ அதற்கு சற்றும் குறைவில்லாத இரு அணிகள் என்றால் அது பெங்களூர் மற்றும் கொல்கத்தாதான். காரணம் அந்த அணியில் இருக்கிற விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர்.
விராட் கோலியின் தொடக்க கால கிரிக்கெட்டில் கோலியும், கௌதம் கம்பீரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். பின்னர் ஐபிஎல் களத்தில் இருவருக்கும் ஒரு முறை வாக்குவாதம் வெடித்தது. இருவருமே கோபத்திற்கு சற்றும் குறைவில்லாதவர்கள் என்பதால் அப்போதிருந்தே இந்த இரு வீரர்களின் அணிகள் மோதும் போட்டி என்றால் ரசிகர்களிடையே ஆர்வம் பத்திக்கும்.
மேலும் பெங்களூர் அணியை 49 ரன்களில் ஆல் அவுட் ஆக்கியதும் இதே கொல்கத்தா அணிதான். அந்தப் போட்டியை ரசிகர்கள் இன்னும் மனதில் வைத்து பெங்களூரு அணியை கிண்டல் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் புனே அணிக்காக ஆலோசகராக கௌதம் கம்பீர் இருந்தபோதும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி நவீன் உல்ஹக் மற்றும் கெளதம் கம்பீர் ஆகியோர் இடையே வாக்குவாதம் நடைபெற்றது நினைவிருக்கலாம்.
தற்போது கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கௌதம் கம்பீர் மீண்டும் ஆலோசகராக கொல்கத்தா அணிக்கு திரும்பியுள்ளார். எனவே ஆலோசகர் கௌதம் கம்பீரிடம் பெங்களூர் அணி உடனான போட்டி குறித்து கேட்கப்பட்ட போது நான் ஒவ்வொரு முறையும் தோற்கடிக்க விரும்பிய ஒரே அணி பெங்களூர்தான் என்று கூறி இருக்கிறார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில்
“நான் ஒவ்வொரு முறையும் தோற்கடிக்க வேண்டும் என்று கனவு கண்டது ஆர்சிபி அணிதான். அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஐபிஎல்லில் இரண்டாவது செல்வாக்கான பெங்களூர் அணியில் விராட் கோலி ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கிரிஸ் கெய்ல் போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்த போதிலும், அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.
இதையும் படிக்கலாமே:பத்திரானா உண்மையாவே தோனி கால்ல தான் விழுந்தாரா.?. நடந்தது என்ன?. வெளியான உண்மை வீடியோ
.@GautamGambhir thinks @RCBTweets have massively underachieved in the past despite having @imVkohli, @henrygayle and @ABdeVilliers17 😬
— Star Sports (@StarSportsIndia) March 29, 2024
Gambhir dreams of getting back on the field and beat Kohli & team yet again! 😱
Don't miss Gambhir's Kolkata take on Virat's Bangalore! 💥… pic.twitter.com/Vvx6YNmqNS
இருந்த போதிலும் அவர்கள் எல்லாவற்றையும் வென்றதாக நினைக்கிறார்கள். அந்த அணுகுமுறையை அவர்களிடம் இருந்து மாற்ற முடியாது. மேலும் கொல்கத்தா அணி பெற்ற மூன்று சிறப்பான வெற்றிகள் ஆர்சிபி அணிக்கு எதிரானது. ஐபிஎல் முதல் ஆட்டத்தில் மெக்கல்லம் ஆர்சிபி அணிக்கு எதிராக குவித்த அதிக ரன்கள், பெங்களூர் அணியை 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது மற்றும் 6 ஓவர்களில் கொல்கத்தா அணி 100 ரன்கள் பெங்களூர் அணிக்கு எதிராக அடித்தது” என்று கூறி இருக்கிறார். கௌதம் கம்பீரின் இந்தக் கருத்தால் இன்று நடைபெற இருக்கும் இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

