15 பேர் கொண்ட உலக கோப்பை இந்திய அணி .. இளம் வீரர் நீக்கம்.. கங்குலியின் 2023 உலக கோப்பை இந்திய அணி!

இந்த முறை ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக ஆசியக் கோப்பைத் தொடர் இரண்டு நாடுகளில் நடத்தப்படுகிறது.

- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 10 ஆண்டுகளுக்கு மேல் தனிப்பட்ட முறையில் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களில் அரசியல் காரணங்களால் விளையாடுவது கிடையாது என்பதால், ஹைபிரிட் முறையில் இந்த முறை இரண்டு நாடுகளில் வைத்து நடத்தப்படுகிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் உள்நாட்டில் நேபாள் அணிக்கு எதிராக ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. இதற்கு அடுத்து இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணியை எதிர்த்து செப்டம்பர் இரண்டு மற்றும் நான்காம் தேதிகளில் விளையாடுகிறது.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. இதில் 20 வயது ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் இடது கை பேட்ஸ்மேன் திலக் வருமா இடம்பெற்று இருந்தார்.

இந்த 17 பேரில் இருந்தே உலகக் கோப்பைக்கு இந்திய அணி தேர்வு செய்யப்படுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. ஐசிசி தொடர்களுக்கு 15 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதிலிருந்து இரண்டு வீரர்கள் நீக்கப்படுவார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலி 15 பேர் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தனது அணியை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த அணியில் அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்து ஆசியக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் பிரசித் கிருஷ்ணாவையும், இளம் வீரர் திலக் வர்மாவையும் நீக்கி இருக்கிறார். மேலும் இவர் அணியில் இருக்க விரும்பிய சுழற் பந்துவீச்சாளர் சாகலையும் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கங்குலி தேர்வு செய்த 15 பேர் கொண்ட இந்தியாவின் உலகக் கோப்பை அணி:

ரோஹித் சர்மா,இஷான் கிஷன் சுப்மான் கில்,ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்.

இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் போட்டியின் மூலம் பதிமூன்றாவது உலகக் கோப்பை தொடர் துவங்குகிறது. நவம்பர் 19ஆம் தேதி இதே மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்று முடிவடைகிறது!

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles